இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
42. முத்தேவியர் வணக்கம்
கல்விக் குரிய கலைமகளே !
கலைகள் பலப்பல எமக்கருளே.
செல்வம் கொழிக்கும் திருமகளே !
சிறப்பாய் வாழ்ந்திட எமக்கருளே.
வலிமைக் குரிய மலைமகளே !
வளமுறத் திருவருள் புரிந்தருளே
தலையால் வணக்கம் புரிகுவமே.
தயவாய் காத்தருள் திருவருளே.
61