பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


பிள்ளை வந்ததும் இந்த நிலை ஏற்படவே எல்லோரும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையென்று பேசிக் கொண்டார்கள்.

மலேரியாவுக்கு மருத்துவம்

காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு சித்த மருத்துவர் குடியிருந்தார். சென்னையில் எங்களைப் பீடித்த காய்ச்சல் காஞ்சிபுரத்திலும் தலை காட்டியது. அந்த மருத்துவர் வந்து பார்த்தார். அவரிடம் நாங்கள் நீண்ட காலமாக உபாதைப் படும் நிலையைத் தந்தையார் எடுத்துச் சொன்னார் அவர் நன்கு சிந்தித்து ஏதோ ஒரு பச்சிலையை அரைத்துப் பெரிய உருண்டைகளாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேலை சாப்பிடும் படியாக மூன்றுநாட்கள் தொடர்ந்து கொடுத்தார். காய்ச்சல் நின்றது. அன்று நின்றதோடு மட்டுமல்ல; இன்று வரை அந்த வேதனைக்குரிய மலேரியாக் காய்ச்சல் எனக்கு வருவதேயில்லை யென்பதை மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன். சித்தமருத்து வத்தில் நம்பிக்கையில்லாத நண்பர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.

காஞ்சிபுரத்தில் நாடகம் தொடர்ந்துநடைபெற்று வந்தது. திடீரென்று ஒருநாள் முக்கிய நடிகனக இருந்த ஏ. கே சுப்பிரமணியன் சொல்லாமல் ஒடிப்போய் விட்டார். நாடகம் நிறுத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக மீண்டும் எங்கிருந்தோ பாட்டா இராமகிருஷ்ணன அழைத்து வந்தார்கள். மழையும் அடிக்கடி பெய்ததால் சில நாட்கள் நாடகம் நிறுத்தப்படவும் நேர்ந்தது. காஞ்சிபுரம் யாருக்குமே வசூலாகாத ஊரென்று சிலபேர் ஊரின் மேல் பழி சுமத்தினார்கள்.

வசூல் இல்லாத நிலையில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. இந்தச் சமயத்தில் அப்பாவுக்குக் கால் பெருவிரலில் ஒரு விஷக்கல் குத்தியதால் சிறு காயம் ஏற்பட்டது. அதை அவர் அலட்சிய மாய் கவனியாது விட்டு விட்டார். சில நாட்களில் அந்தக் காயம் ரணமாகிச் சீழ் வடிய ஆரம்பித்தது. ரண வைத்தியர் ஒருவர் காயத்தைச் சோதித்துப் பார்த்தார். காயம் பட்ட இடத்திலிருந்த துவாரத்தில் ஒரு சிறு கம்பியைச் செலுத்தினார். அந்தக் கம்பி குதிங்கால் வரை வலியே யில்லாமல் உள்ளே