பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


போயிற்று பாதம் முழுதும் புறையோடி இருப்பதாகத் தெரிந் தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பா வலி பொறுக்க மாட்டாமல் படுக்கையில் கிடந்து சில நாட்கள் கஷ்டப்பட்டார். இதற்குள் காஞ்சீபுரம் நாடகம் முடிந்து விட்டதால் வைத்திய ரிடம் மருந்து வாங்கிக் கொண்டு சைதாப்பேட்டைக்குப் பயணப் பட நேர்ந்தது.

சைதாப்பேட்டை

கம்பெனி சைதாப் பேட்டைக்குப் போன மூன்று நாட் களுக்குப் பிறகு நாங்களும் சைதாப் பேட்டைக்கு வந்து சேர்ந் தோம். முதல் நாடகத்தன்று பெருமழை பெய்தது. நாடகம் நடைபெறவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் நாடகம் துவக்கப் பெற்றது. வசூல் சுமாராக இருந்தது. எங்கள் ஒப் பந்தம் தீர்ந்து விட்டதால் மறுபடியும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென உரிமையாளர்கள் வற்புறுத்தினார்கள். அப்பாவுக்கும் உழைப்புப் பங்காளியான பழனியாபிள்ளைக்கும் சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டுக் கொண்டே யிருந்ததால் மறு ஒப்பந்தம் எழுதுவது தடைப்பட்டது. பாட்டியின் முதல் ஆண்டுத் திதி அடுத்து வந்ததால் அதற்குக்குடும்பத்துடன் திருவனந்தபுரம் போய் வரவேண்டுமென்றும், அதன் பிறகு ஒப்பந்தம் எழுதிக் கொள்ளலாமென்றும் அப்பா கூறி விட்டார். அந்த நிலையில் எங்களை ஊருக்கு அனுப்ப சின்னையாபிள்ளை இசையவில்லை.

பால மனோகர சபை

சென்னை ராயல் தியேட்டரில் அப்போது திரு தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலரின் பால மனோகர சபையார் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராயல் தியேட்டர் என்பது அப்போது சென்னையில் இருந்த எல்லா நாடகக் கொட்டகை களிலும் சிறந்த ஒன்முகக் கருதப் பட்டது. ஆனைக்கவுனிக்கு மேற்புறமுள்ள பாலத்திற்குக் கீழ்ப்பக்கம், சால்ட்கொட்டகைக்கு அருகில் அமைந்திருந்தது. மிகப் பெரிய நாடக அரங்கம்.

அந்தக் காலத்தில் ஒரு கம்பெனியிலிருந்து. மற்றொரு கம்பெனிக்குப் பையன்களைக் கடத்திக் கொண்டுபோவது சாதாரணமாக நிகழ்ந்து வந்தது. இந்தத் திருப்பணிக்கென்றே சில தரகர்