பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157


விளையாட்டுகளில் இவ்வாறு முதன்மை பெற்றிருந்தாலும் நாடகங்களில் சிறிய பாத்திரங்களையே தாங்கி வந்தார். அவர் கோவலனில் பாண்டியன், சாவித்திரியில் சத்தியவானின் தந்தை துயுமத்சேனன், மனோஹரனில் பெளத்தாயணன் இவைதாம் என். எஸ். கிருஷ்ணனுக்குத் துவக்கத்தில் கிடைத்த வேடங்கள்.

எஸ். ஆர். ஜானகி நாடகம்

திருவனந்தபுரம் ஆரிய சாலையில் எங்கள் கம்பெனி தொடங்கிய நேரத்தில், ஓவியர் பொன்னுசாமிப் பிள்ளை கம்பெனியார் அங்கே நாடகங்கள் நடத்தி வந்தார்கள். அவர்களும் எங்களுடனேயே தியேட்டருக்குள் குடியிருந்தார்கள். அவர்களுடைய நாடகங்கள் சிலவற்றைப் பார்க்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கம்பெனியில் எஸ். ஆர். ஜானகி அம்மாள் கதாநாயகனாக நடித்து வந்தார். கதாநாயகி எஸ். என் இராஜலட்சுமி, ஜானகியம்மாள் மிக நன்றாக பாடுவார். அவரது குரல் கெம்பீரமாக இருக்கும். வேடம் புனைந்து, மேடைக்கு வந்துவிட்டால் பெண் என்ற நினைவே சபையோருக்கு ஏற்படாது, தோற்றம், நடை, பாவனை எல்லாம் ஆண் போலவே இருக்கும். அவர்கள் நடித்த நாலைந்து நாடகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்ததும் எங்களுக்கெல்லாம் அவர்கள் மீது பற்றுதல் உண்டாகி விட்டது. நாங்கள் எங்கள் அன்னையாருடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையிலேயே தங்கியிருந்தோம். எஸ்.ஆர். ஜானகியம்மாள் எங்கள் தாயாருடன் நெருங்கிப் பழகினார்கள். அங்கு, சிலநாட்கள் ஒன்றாகக் குடியிருந்து விட்டு, அவர்கள் பிரிந்து சென்றபோது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.

நாடகத் துவக்கம்

1925 பிப்ரவரி 15 ஆம் நாள் சின்னையாபிள்ளை கம்பெனியை விட்டு விலகினோம், ஒன்றரை மாதத்திற்குப் பின் 1925 மார்ச்சு 31ஆம் நாள், ஆரியசாலைத் தியேட்டரில், எங்கள்