பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீர்திருத்த நாடகாசிரியர்

திருப்பூரில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தபொழுது, சீர் திருத்த நாவல் நாடகாசிரியர்’ எனப்புகழ்பெற்ற திரு எம் கந்தசாமி முதலியார் எங்கள் கம்பெனிக்கு வந்துசேர்ந்தார். முதலியா ரோடு அவரது புதல்வரான நடிகமணி எம். கே. ராதாவும், மற்றொரு சிறந்த நடிகரான கே கே. பெருமாளும் வந்தார்கள். ஏற்கனவே நடந்து வந்த இராஜாம்பாள் நாடகம், ஆசிரியர் முதலியார் வந்ததும் புதுமை பெற்றது. கந்தசாமி முதலியார் சென்னை சுகுண விலாச சபையில் பெண் வேடநடிகராக இருந்தவர். பம்மல் சம்பந்த முதலியாரிடம் பயிற்சி பெற்றவர். பாலாம்பாள் கம்பெனி, பி. எஸ். வேலுநாயர் கம்பெனிகளுக்கெல்லாம் பம்மல் முதலியாரின் மனோஹரன் நாடகத்தை இவர்தான் சொல்லி வைத்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நீண்டகாலம் இருந்தார். ஜே. ஆர். ரங்கராஜூவின் இராஜம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, ஆனந்த கிருஷ்ணன் ஆகிய நாவல்களையெல்லாம் நாடகமாக்கி அரங்கேற்றினார். இவரை எங்கள் ஆசிரியராகப் பெற்றது பெரும் பாக்கியம் என்றே கருதினோம். திருப்பூர் நாடகம் முடிந்து கம்பெனி பாலக்காடு சென்றது.

புதிய நாடகங்கள்

பாலக்காடு வந்ததும் பம்மல் சம்பந்தனரின் இரத்தினாவளி பாடம் கொடுக்கப் பெற்றது. அப்போது எங்கள் கம்பெனியில் எஸ். என். இராமையா, மனோகரனத் தவிர மற்றெல்லா நாடகங்களிலும் கதாநாயகனுக நடித்து வந்தார். இரத்தினவளியில் வத்சராஜன் பாடம் மிகவும் அதிகமான வசனங்கள் உள்ளது. அதை இராமையாவுக்குக் கொடுக்க வாத்தியார் விரும்பவில்லை. “வுண்முகம்தான் வேண்டும்” என்று வற்புறுத்தினார். வத்சராஜன் பாடம் எனக்குக் கொடுக்கப்பெற்றது. பாலக்காடு அமிட்டி