பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180


யில்லாமல் யாரையும் சேர்ப்பது வழக்கமில்லை. சகஸ்ரநாமம் வந்து கேட்டபோது அவருக்கு 13 வயதிருக்கலாம். “உன் தகப்பனரிடமிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வா சேர்த்துக் கொள்கிறேன்” என்றார் பெரியண்ணா. உடனே சகஸ்ரநாமம் கம்பெனியில் சேரவேண்டுமென்ற ஆர்வத்தால், தகப்பனார் எழுதுவதுபோல் ஒரு கடிதத்தைத் தாமே எழுதினார். பெரியண்ணாவிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டுக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். பிறகு அந்தக் கடிதத்தில் கண்ட முகவரிக்குப் பெரியண்ணா கடிதம் எழுதினார். தகப்பனார் அலறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அவருக்கு சகஸ்ரநாமத்தைக் கம்பெனியில் சேர்க்க விருப்பம் இல்லை. பெரியண்ணா அவரோடு வெகு நேரம் வாதாடினார். “நாடகத் துறையில் விருப்பமிருக்கும் பையனை வேறு துறைக்கு அனுப்புவது சரியல்ல” என்று எடுத்துச் சொன்னார். கடைசியாகத் தந்தையின் பூரண சம்மதத்தோடு சகஸ்ரநாமம் கம்பெனியில் சேர்ந்து கொண்டார்.

எடிபோலோ, எல்மோ

கோவை நாடகம் முடிந்ததும் கம்பெனி சேலம் சென்றது. சேலம் கொட்டகைகளிலும் சினிமா சீரியல் படங்கள் நடந்து வந்தன. அவை எடியோலோ, எல்மோ நடித்த படங்கள். இவ்விரு நடிகர்களும் சீரியல் மெளனப் படங்கள் வந்த காலத்தில் பிரமாதமான பெயர் பெற்றிருந்தார்கள். இந்த இரு நடிகர்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தார்கள். இவர்கள் அந்நடிகரின் பெயரால் கட்சியாக நின்றனர். எங்கள் கம்பெனி நடிகர்களில் சிலர் எடிபோலோ கட்சி; சிலர் எல்மோ கட்சி; இருவரில் யார் நல்ல நடிகர்? யார் பலசாலி? என்பதில் இரு கட்சியாளருக்கும் போட்டி. சில சமயங்களில் இதற்காக வாய்ச் சண்டைகூட ஏற்படுவதுண்டு. பழங்காலத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களே யெல்லாம் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இப்போதும் கட்சிச்சண்டைகள் வேறு உருவங்களில் இருந்து வருகிறதே தவிர, அடிப்படை உணர்ச்சி மாறிவிட்டதாகக் கூறுவதற்கில்லை. இவ்வாறு நாங்கள் சினிமா பார்த்து வந்த போதெல்லாம் இந்தச் சினிமாப் படம் வாய் திறந்து பேசுவது நம் காதில் விழுந்