பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187


கூடியவர். ஏற்கனவே சின்னையாபிள்ளை கம்பெனியில் எங்களோடு: இருந்தவர். அந்தக் கம்பெனி நிறுத்தப்பட்டதும் நாங்களே விரும்பி ராமையாவைச் சேர்த்துக் கொண்டோம். அவர், தம் குடும்பத்துடன் தனியே வசித்து வந்தார். அவருக்குப் பல புதிய நண்பர்கள் சேர்ந்தார்கள். அவர் க ளின் போதனையினல் ராமையா, அதிகச் சம்பளம் கொடுத்தால்தான் கம்பெனியில் இருக்க முடியும் என அறிவித்தார். மாதம் ஆயிரம் ரூபாய்கள் வேண்டுமென்று கேட்டார். அவருக்குப் பின்பலமாக உள்ளுரிலுள்ள ஒரு வக்கீல் இருந்து வேலை செய்தார். இராமையாவை: நிறுத்திவிட்டு, நாங்கள் நாடகம் நடத்த ஆரம்பித்தோம். அவருக்குத் துணையாக இருந்த வக்கீல், கரூரில் நல்ல செல்வாக்கு. உடையவர். அவருடைய ஆட்கள் நாடகம் நடைபெறாமல் குழப்பம் செய்து வந்தார்கள். வேறு வழியின்றிப் பஞ்சாயத்துப் பேசி ரூபாய் ஐநூறு சம்பளம் தருவதாகச் சொல்லி இராமையாவை மீண்டும் சேர்த்துக் கொண்டோம்.

கரூரிலிருந்து கம்பெனி புதுக்கோட்டைக்குப் போனதும் இராமையா மீண்டும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அவரை விலக்கிவிட்டு நன்னிலம் நடராஜன் என்னும் புதிய நடிகர் ஒருவரைச் சேர்த்துக் கொண்டோம்.