பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டைத் தம்புடு பாகவதர்

புதுக்கோட்டையில் தம்புடு பாகவதர் என்றால் அனை வருக்கும் தெரியும். அப்போது எங்கள் கம்பெனியில் ஆர்மோனியம் வாசித்து வந்த பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் புதுக்கோட்டையைச்சேர்ந்தவர்.அவர்தான் தம்புடு பாகவதரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தம்புடு பாகவதர் சிறந்த சங்கீதஞானம் உடையவர்; கதா காலட்சேபக் கலையில் விற்பன்னர்; புதுக்கோட்டையிலேயே தம் தந்தையின் பெயரால் ஒரு சிறந்த கலாசாலையை நடத்தி வந்தார் அவர்.

இளஞ் சிறுவர்களுக்குப் பாடல்களைப் பயிற்றுவிப்பதில் இவருக்கு நிகரான ஒருவரை நான் இதுவரையிலும் கண்டதில்லை. சிதம்பரபாகவதர் என்பது இவரது பெயர். ஆனால் எல்லோரும் தம்புடு பாகவதர் என்றே அழைப்பார்கள்.

இவர் துருவச் சரித்திரத்தை நாடகமாக எங்களுக்குப் பயிற்றுவித்தார். பாடங்கள் அனைத்தும் நல்ல கர்னடக இசையில் அமைந்திருந்தன. அவற்றை அவர் எங்களுக்குப் பயிற்றுவித்த முறையே போற்றத் தக்கதாக இருந்தது. நான் துருவகை நடித் தேன். புதுக்கோட்டையில் துருவன் நாடகத்திற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. இதைநாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி சென்றோம். அங்கும் துருவன் நாடகத்திற்குப் பிரமாதமான வரவேற்பும், வசூலும் இருந்தன. காரைக்குடியில் மட்டும் தொடர்ந்து துருவன் நாடகத்தையே பலமுறைகள் நடித்தோம். நாடகம் மக்களை மிகவும் கவர்ந்தது.

துருவனில் ஆங்கிலம்

அந்தநாளில் ஸ்பெஷல் நாடக நடிகர்கள் புராண இதிகாச நாடகங்களில் சாதாரணமாக ஆங்கில வார்த்தைகளைப் பயன்