பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216


லிருந்து அப்போது தான் நவாப் ராஜமாணிக்கம், காமடியன் சாரங்கபாணி, ஏ. எம். மருதப்பா, சிதம்பரம் ஜெயராமன் முதலியோர் விலகி, அவர்களுக்கும் ஜெகன்னதய்யருக்கும் வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் என். எஸ். கிருஷ்ணன் தமது கம்பெனிக்கு வந்ததும் ஐயர் மிகவும் சந்தோஷப்பட்டு, சாரங்கபாணி போட்டு வந்த வேடங்களை யெல்லாம் கிருஷ்ணனுக்குக் கொடுத்துக் கெளரவத்தோடு நடத்தி வந்தார்.

ஜெகன்னாதய்யரிடம் செல்வாக்கோடு இருந்து வந்த அந்த நிலையிலும், என். எஸ். கிருஷ்ணனுக்கு எங்கள் குழுவின் மீதே பற்றுதல் இருந்து வந்தது. இரவில் உறக்கம் பிடிக்கவில்லை. அவசரத்தில் ஐயருக்கு ஒப்பந்தமும் எழுதிக் கொடுத்திருந்தார். ஒரு நாள் திடீரென்று புறப்பட்டு, நேராக ஆலப்புழைக்கே வந்து விட்டார். தம்மால் அங்கிருக்க முடியவில்லையென்றும், பயிற்சி பெற்ற இடத்திலேயே இறுதிவரை இருக்க வேண்டுமென்று தமது நல்லுணர்வு தூண்டியதாகவும் கூறினார். நாங்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம்.

கலைவாணருக்கு நெருக்கடி

சில நாட்கள் சென்றன. ஒருநாள் எல்லோரும் ‘பாட் மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தோம். யாரோ ஒருவர் வந்து, என். எஸ். கிருஷ்ணனைப் பார்க்கவேண்டுமென்று கூறினார். நாங்கள் கிருஷ்ணனைக்காட்டினோம், வந்தவர் ரகசியப்போலீசைச் சேர்ந்தவர். அவர் உடனே என். எஸ். கிருஷ்ணனைக் கைது செய்து அழைத்துச் சென்றார். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி! ஜெகன்னாதய்யர், என். எஸ். கிருஷ்ணனைத் திருட்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி, வழக்குத் தொடர்ந்திருந்தார். *அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள், மானேஜர் காமேஸ்வர ஐயரும், சிற்றப்பாவும், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று ஏதேதோ செய்து பார்த்தார்கள். ஜாமீனில் விடுவிக்க முயற்சி செய்யப்பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் ‘பிரிட்டிஷ் ரெசிடெண்ட்’ கட்டளைப்படி கைது செய்யப்பட்டதால் எதுவும் செய்ய இயலவில்லை. மதுரைக்குப் போய்த்தான் ஜாமீனில் விடுதலைக்கு முயற்சிக்க வேண்டுமென்று