பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219


மறுத்துவிட்டார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு இதுவே பெரிய கவலையாகப் போய்விட்டது. அடிக்கடி ஏதாவது நோய் வந்து தொல்லே கொடுக்க ஆரம்பித்தது.

மனநோய்க்கு மருந்தேது? அன்னையார் எப்போதும் இதே நினைவில் இருந்து மனம் வெதும்பினார். மூத்த புதல்வரின் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்டோமே என்ற உணர்ச்சி அவரை உருக்குலைத்து விட்டது.பெரியண்ணா வீட்டிற்கு வருவதே இல்லை. உணவு, உறக்கம் எல்லாம் கம்பெனி வீட்டிலேயே நடந்துவந்தன. மதினியாரின் நிலை மிகவும் பரிதபிக்கத் தக்கதாய் இருந்தது. பாவம்! பெண்ணல்லவா? அவர் தமது மன உணர்ச்சிகளையெல் லாம் அடக்கிக்கொண்டு ஒரு உத்தமமான குடும்பத் தலைவிக் குரிய முறையில் எல்லோரிடமும் அன்போடும், பண்போடும் பழகினார். நானும் சின்னண்ணாவும் மதினியாரின் நிலையை எண்ணியெண்ணி வருந்தினோம். முக அழகு குறைந்துவிட்டால்: என்ன? வேறு எவரிடமும் காண்பதற்கரிதான அக அழகு. அண்ணியாரிடம் நிறைவு பெற்றிருந்தது. அதுவே அவரது: வாழ்க்கையை உயிர்ப்பித்தது என்றும் சொல்லலாம்.

உத்தமமான மனிதர்

இந்தச் சமயத்தில் ஆலப்புழையில் என் சிறு தவருல் நேர இருந்த ஒரு பேரிழப்பு என் நினைவிற்கு வருகிறது. நாங்கள் எங்களுடைய பரிசுப் பொருட்கள் அனைத்தையும் ஒரு சிறு பெட்டி யில் வைத்து, நாடகத்திற்குப் போகும்போது கையில் கொண்டு. செல்வதும் திரும்பும்போது பத்திரமாகக் கொண்டு வருவதும். வழக்கம். அப்பெட்டியில் இருந்த பொருட்களின் மொத்த மதிப்பு அந்த நாள் கணக்குப்படி பத்தாயிரம் ரூபாய்வரை இருக்கலாம். ஒருநாள், நாடகம் முடிந்து திரும்பியபோது மிகுந்த அசதியாக இருந்தது. இரவு இரண்டு மணிக்கு வந்து, வீட்டுக் கதவைத் தட்டினோம். கதவைத் திறக்கச் சற்று நேரமானதால் பெட்டியை வைத்துவிட்டு முன் திண்ணையில் உட்கார்ந்தோம். சற்று நேரத். தில் கதவு திறக்கப்பட்டது. என்ைேடு வந்த சின்னண்ணாவும், பகவதியும், சிற்றப்பாவும் உள்ளே சென்றார்கள். நானும் மறதி யால் பெட்டியை எடுக்காது அவர்களைப் பின் தொடர்ந்தேன்.