பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222


வேடங்களில் நடித்துப் பழகினார். பிறகு அவருக்கு அபிமன்யு சுந்தரியில் கடோற்கஜன் கொடுக்கப்பட்டது.

அபிமன்யு கதை

சங்கரதாஸ் சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகக் கதை உங்களுக்குத் தெரியுமல்லவா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தமது புதல்வி சுந்தரியைத் துரியோதனன் மகன் இலக்கணனுக்குக் கொடுக்க முடிவு செய்து விடுகிறார். இந்தச் செய்தியறிந்த சுந்தரி தன் அத்தை மகன் அபிமன்யுவுக்கு ஒலை அனுப்புகிறாள். வீரன் அபிமன்யு அந்தத் திருமணத்தைத் தடுத்துச் சுந்தரியை மீட்க வீராவேசத்தோடு புறப்படுகிறான்; வழியில் பீமன் மகன் கடோற் கஜனச் சந்திக்கிறான். இன்னாரென்று தெரியாமல் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் உண்மை யறிந்து உறவாடி இருவருமாகப் புறப்படுகிறார்கள். அதன் பின் அர்ஜூனனின் மற்றொரு மகன் அரவானைச் சந்திக்கிறார்கள். அங்கேயும் ஆள் தெரியாமல் போர் நடக்கிறது. இறுதியில் சகா தேவன் மகன் தொந்திசெட்டி குறுக்கிடுகிறான். அங்கேயும் சண்டை நடக்கிறது. பிறகு சமாதானம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நால்வரும் துவாரகைக்குச் செல்லுகிறார்கள். துரியோ தளுதியரை முறியடித்து வெற்றி பெறுகிறார்கள். அபிமன்யுவுக்கும் சுந்தரிக்கும் திருமணம் இனிது நடைபெறுகிறது. இது தான் நாடகக் கதை.

தொந்திசெட்டி ஒரு நகைசுவைப் பாத்திரம். சகோதரர் மூவரோடும் அவர் சண்டை போடுகிற காட்சி மிகவேடிக்கையாக இருக்கும். கடோற்கஜனும், தொந்திசெட்டியும் மற்போர் புரிவது, சபையோரிடையே பெரும் ஆரவாரத்தையெழுப்பும். இறுதியில் தொந்திசெட்டியே தோல்வியடைய வேண்டும். புதிய இளைஞர் கடோற்கஜன் வேடம் தாங்கி மிக நன்றாக நடித்தார். தோற்றமே கடோற்கஜனுக்குப் பொருத்தமாக இருந்ததால் விரைவில் சபையோரின் பாராட்டைப் பெற்றார். தொந்தி செட்டியோடு நாங்கள் சண்டை போடும் காட்சி வந்தது. என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் ஒத்திகையில் அவருக்குத் தெளிவாகச் சொல்லியிருந்தோம். அந்தக் கடோற்