பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255


கம்பெனியை மற்றொருவரிடம் ஒப்படைப்பதை எவ்வளவோ தடுத்தார். பல ஆண்டுகள் வசூல் இல்லாது, மனம் கசந்து இருக்கும் நிலையில் பெரியண்ணா சுந்தரராவின் யோசனையை ஏற்க வில்லை. சகல செலவுகளும் கோவிந்தசாமி நாயுடுவே செய்து கொள்வதென்றும், நாங்கள் நால்வரும் நடிப்பதற்காகவும், காட்சியமைப்புகள், உடைகள் இவற்றிற்காகவும் ஆண்டுக்கு ஆருயிரம் ரூபாய்கள் பெற்றுக் கொள்வதென்றும், கம்பெனியின் பெயர் ஸ்ரீபாலஷண்முகானந்தசபா என்றே இருக்கவேண்டுமென்றும் பேசி முடிவு செய்யப்பட்டது. எங்கள் நடிகர்கள் அனைவரும் இந்த ஏற்பாட்டுக்கு வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார்கள். என். எஸ் கிருஷ்ணன், பெரியண்ணாவுடன் எவ்வளவோ தடுத்துப் பேசிப் பார்த்தார். இறுதியாக அவரும் ஒப்புக் கொண்டார். மூன்றாண்டுகள் இவ்வாறு நடைபெற வேண்டு மென்று கோல்டன் கோவிந்தசாமி நாயுடுவுடன் ஒப்பந்தம் முடிவாகியது. காரைக்காலில் கடைசியாக நாடகம் நடத்தி விட்டு 1932இல் கம்பெனியை நாயுடுவிடம் ஒப்படைத்தோம்.