பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267


பலாத்காரம் செய்யப் போய் பரிதவித்த அந்தப் பரிதாபத்துக்குரிய சுண்டுர் இளவரசன் வேறு யாறுமல்லன்; அடியேன் தான். கும்பகர்ணன் சேவையிலிருந்து விடுபட்டு, உள்ளே அறையும் பட்டு, வந்த உணர்ச்சியில் என்னைப் பேயறை அறைந்த ராகவரெட்டி எனது அருமைத் தம்பி பகவதி.

நாயுடுவுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வசூல் இல்லாததால் நாயுடுவுக்கு எங்களைக் கண்டாலே வெறுப்பாக இருந்தது.

என். எஸ். கே. யோசனை

இந்நிலையில் மதுரை பால வினோத சங்கீத சபையின் உரிமையாளராகிய பக்கிரி ராஜா, கரூருக்கு வந்தார். அப்போது அவருடைய கம்பெனியிலிருந்து நவாப் இராஜமாணிக்கம் கே. சாரங்க பாணி முதலியோர் பிரிந்து சொந்தமாகத் தேவி பால வினோத சங்கீத சபா என்னும் கம்பெனியைத் துவக்கியிருந்தார்கள். பக்கிரி ராஜா என், எஸ். கிருஷ்ணனிடம் தனியாகப் பேசினார். அவரைத் தமது கம்பெனிக்கு வருமாறு அழைத்தார். பெரியண்ணா பக்கிரி ராஜாவைச் சந்தித்து, என். எஸ். கிருஷ்ணனை அழைத்துப்போவதால் தமக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென்று கூறி அனுமதி யளித்தார். மறுநாள் கிருஷ்ணன் பெரியண்ணாவிடம் வந்து, பக்கிரி ராஜா எங்கள் நால்வரையும் விரும்புவதாகவும், நாமெல்லோரும் ஒரு குழுவாகவே போய்க் கொஞ்சகாலம் நிம்மதியாக இருக்கலாம் என்றும் யோசனை கூறினார். பெரியண்ணா அதற்கு உடன்படவில்லை. நாங்கள் மறுத்து விட்டதால் என். எஸ். கிருஷ்ணனும் பக்கிரி ராஜா கம்பெனிக்குப் போக மறுத்து விட்டார்.

ஒப்பந்தம் ரத்தாகியது

கரூரில் எங்களுக்கும் நாயுடுவுக்கும் வழக்கு நடைபெறக் கூடிய அளவுக்குக் குழப்பங்கள் வளர்ந்தன. பெரியண்ணா மிகவும் வேதனைப்பட்டார். தொடர்ந்து வந்த துன்பத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிக் கம்பெனியை ஒருவரிடம் ஒப்படைத்தோம். ஆனாலும் எங்கள் துன்பம் தீரவில்லை. செலவுக்குப் பணம் பெறுவதே கஷ்டமாகப் போய்விட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்