பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291


கொண்டு குளித்தார். படித்துறைதானே பிராமணர்களுக்குச் சொந்தம்? வாய்க்கால் எல்லாருக்கும் பொதுதானே? பிராமணர்கள் குளிப்பதற்கு முன்புறம்போய் வாய்க்காலில் அவர் நின்று கொண்டார். பிராமணர்கள் முணுமுணுத்தார்கள். அன்று மாலை நாங்கள் வழக்கம்போல் வெளியே போய்விட்டு வரும்போது அக்ரஹாரத்தில் ஏதோ கூட்டம் நடப்பதைப் பார்த்தோம். பெஞ்சின்மீது நின்று ஒரு வைதீகப் பிராமணர் பேசிக் கொண்டிருந்தார். மயில்ராவணன் நாடகத்தில் நாங்கள் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகவும், வாய்க்கால் படித்துறையில் அக்ரமம் செய்ததாகவும், அதனால் ஸ்ரீ பால சண்முகானந்த சபையார் நடத்தும் நாடகங்களுக்குப் பிராமணர்கள் போகக்கூடாதென்றும் பிரசங்கம் செய்தார். நாங்கள் அவருடைய அறியாமையை எண்ணிச் சிரித்தோம். இந்தப் பிரசங்கத்திற்குப் பிறகு மயில் ராவணனுக்கு அதிக வசூலாயிற்று. பக்கத்திலுள்ள சத்தியமங்கலத்திலும் மயில் ராவணன் போடவேண்டுமென்று அழைப்பு வந்தது. அங்கும் ஸ்பெஷலாகப் போய்ச் சில நாடகங்கள் நடத்திவிட்டு வந்தோம்.