பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நல்ல காலம் பிறந்தது

சிவ லீலாவுக்காக கைலாயம்; பாண்டியன் அவை, ஹேம நாதன் வீடு; தாமரைத் தடாகம்; சொக்கேசர் சந்நிதி; மீனாட்சி யம்மன் சந்நிதி; பொற்றாமரைக்குளம்; சங்கமண்டபம்; அபிஷேக பாண்டியன் அந்தப்புரம், கல்யானை மண்டபம், துர்க்கை சந்நிதி கடற்கரை முதலிய காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டன. ஆலயத்தின் உள்ளேயுள்ள கல்யானைகளை அப்படியே மோல்ட் எடுக்க ஆலய அதிகாரிகள் ஒத்துழைத்தார்கள். இவற்றைத் தவிர இடையே தாமதம் ஏற்படாதிருக்கச் சில மாறுங் காட்சிகளும் வரையப் பெற்றன. ஒவியர் தேவராஜய்யர் ஒவ்வொரு காட்சியையும் வியக்கத்தக்க வகையில் எழுதினார். ஒப்பனையாளர் இராஜ மாணிக்கம் உடைகளுக்காக வரைபடங்கள் எழுதிக்கொண்டு பல வித வண்ண உடைகள் வெல்வெட்டிலே தயாரித்தார். சரிகை வேலைப்பாட்டில் கைதேர்ந்த மஸ்தான்கான், சுபான் சாயபு ஆகிய முஸ்லீம் கலைஞர்கள் தறியில் இடைவிடாது வெள்ளிச் சரிகை வேலை செய்தனார். மரச் சிற்ப வேலையில் பிரசித்தி பெற்ற இரு மலையாள இளைனார்கள், சிங்க ஆசனம், யானை ஆசனம், மயில் ஆசனம், மயில் கட்டில், பல்லக்குகள் முதலியனவற்றை விரைவாகச் செய்து முடிக்க, அவற்றிற்குத் தங்க ரேக் ஒட்டும் நுணுக்கமான வேலையை நடிகர்கள் அனைவரும் செய்தார்கள். பின்னணி இசையமைப்புக்காக டி. எம். இப்ராஹீம் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். நகைச்சுவை நடிகர் சிவதாணு நடனப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு பாவையர் நடனம், மயில் நடனம், வலைனார் நடனம் ஆகியவற்றை அழகுபெற அமைத்தார். ஆலவட்டம், சந்திரவட்டம், சூரியப் பிரபை, தங்கத்தடி, வெள்ளித்தடி, மீனக்கொடி, வெண்சாமரம்