பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382


அசாதாரண கடவுட் செயல்களை நிகழ்வனபோல் நேரிற் காட்டி, பார்ப்பவரெல்லாம் பரவசப்படுமாறு அமைத்திருந்த அழகு வியக் கத் தக்கது. இசையொடு நிறைந்த இன்சுவைப் பாட்டுகள் ஒவ்வொரு நடரும்பாடிய சிறப்பு உணர்வைக்கொண்டது. ஐம்பொறி களையும், அறிவையும் ஈர்த்து ஒப்பக் களிக்கச் செய்த இந்நாடகத்தை எல்லோரும் வியந்து புகழ்வது இயற்கையாகும். இத்தகைய நல்ல கதைகளே நாடகமாக்கி நடித்துத் தமிழரை அறிவும் ஒழுக்கமும் இன்ப முறையில் எளிதில் உணர்த்தி இச் சபையார் புகழொடு செல்வம் பெருக அருளுமாறு இறைவனை இறைஞ்சுகின்றேன்; சபையோருக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்து கின்றேன்.

மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழாசிரியர்
ஆ. கார்மேகக்கோனார் அவர்கள்

”... ... ... .... .... ... ... ... ... ...
ஆலவாய் அவிர்சடைப் பெருமான் அன்று
சாலவே மன்பதை தாமுய்ங் திடற்கு
அருளொடு புரிந்த திருவிளையாடலுள்
ஒரு சில வற்றை உருவுடன் தொகுத்து
இந்த காள்தனில் இங்ககர் வாழும்
மக்கள் யாவரும் மகிழ்ந்துகண் டின்புற
ஆடலும் பாடலும் அபிநய வகைகளும்
பீடுறும் எழினியின் பிறங்கொளி கலங்களும்
சாலவே அமையப் பால சண்முகா
ந்த சபையார் நலமுடன் புரிந்து
நூற்றெட்டு நாட்களும் நுவவருஞ் சிறப்பொடு
நாற்றிசை போற்ற கடித்திட்ட காட்சியை
என்னென் றியம்புவேன்! இந்நக ரெல்லாம்
எண்ணாம் எண்ணமும் இயம்பும் சொல்லும்
சிவலீ லையே! சிவலீ லையே!"

திருவனந்தபுரம் இசைச் செல்வர்
திரு தி. இலட்சுமணபிள்ளை அவர்கள்

டி. கே. எஸ். 8 சகோதரர்கள் மதுரையில் நடத்தி வருகிற நாடகங்களில் சிவலிலே என்னும் திருவிளையாடற் புராணக்கதை