பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386


இங்கிதமும் குணநெறியும் தவருத சதுரரிவர்
இனிதாய் வாழ்க!
மங்களமும் நிறைமதியும் நவகிதியும் ஓங்கியென்றும்
வாழ்க மாதோ!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜனாப் உபயதுல்லா அவர்கள்

இவர்கள் தேர்ச்சியாக நடத்தி வரும் சிவலீலா நாடகத்தை இரண்டு முறை பார்த்தேன். மிகவும் நேர்த்தியாகவும், நடி கர்கள் திறமையாகவும் வாக்குச் சுத்தத்தோடும் இசைவன்மை யோடும் நடிப்பின் பாவத்தோடும் நன்முக நடிக்குந் தன்மை, மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. சரித்தித்தின் தன்மை, போக்குக்கு ஏற்றார்போல் காட்சிக்கு அழகான படுதாக்கள். வர்ணத்தட்டிகள் மிக மிக அமைப்பாக இருந்தது. மணிக்கணக் காகப் பார்ப்பதில் சலிப்புத் தட்டவில்லை. இப்பொழுது நவீன முறையில் பல சினிமாப் படங்கள் மதுரை நகரில் நடந்து வரும் போதும் ஒரே கதையை நூறுதினங்கள் நடத்திய பிறகும் ஜனங் களின் உற்சாகம் குன்றாது கூட்டம் கூட்டமாகப் பார்த்து வருவது ஒன்றே, இக்கம்பெனியின் திறமையை மெய்பிக்கிறது.

குமரகவி திரு. மு. நாராயணசாமி பிள்ளை

நவரசங்கள் மேவுமுயர் நாடகப்பண் பால்முன் த
வமுனிவர்க் கேற்றவரம் தந்தோன்-சிவபெருமான்
செய்தவிளை யாட்டெல்லாம் தெள்ளதென் றேயளிக்கும்
மெய்ச் சிவலி லாபொன்னா மே.

திரு. பி. பாஸ்கரய்யர்

தண்டமிழார் கூடலிறை தந்தவிளை யாடலொடு
தொண்டர்புரா னத்திலொரு தொண்டர்கதை -கொண்ட
சிவலீலா நாடகத்தின், சீர்த்திதனைப் பாரார்
பவல்லா நீங்காரென் பேம்.

செட்டிநாடு குமாரராஜா சா.மு. அ. முத்தையா செட்டியார் அவர்கள்

ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையாரால் நடத்தப்பெற்ற சிவல்லா என்னும் புண்ணிய திவ்ய சரித்திரத்தை அதன் நூறாவது தினத்தன்று கண்டு களிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததைப் பற்றி மட்டற்ற மகிழ்சியடைந்தேன். இந்நகரிலே இந்