பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

409


அவள் உடல்நிலை தேறவில்லையென்று கடிதம் வந்தது. அவளே உருக்கத்தோடு எழுதியிருந்தாள்.

பண்டித சர்மா ஒருநாள் என்னை அழைத்தார். சென்றேன்.

“நீங்கள் தொடர்ந்து சில மருந்துகள் சாப்பிட வேண்டும் என்றார். “சாப்பிடுகிறேன்” என்று ஒப்புக் கொண்டேன்.

அவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டேன். “சாத்துக் குடிச்சாறு இரவு படுக்கைக்குப் போகு முன் ஒரு கோப்பை குடிக்க வேண்டும்” என்றார்.

அதன்படியே குடித்து வந்தேன். கரூர் நாடகம் முடிந்து பாலக்காடு புறப்படும்போது சர்மாவிடம் சென்று விடை பெற்றேன். புதிதாக மருந்துகள் எதுவும் கொடுக்கவில்லை. “சாத்துக்குடிச் சாறு மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்” என்றார். “ஏன்?” என்று கேட்டேன். “வேறொன்றுமில்லை. உடம்புக்கு நல்லது” என்றார் சர்மா. என்ன காரணத்திற்காக சர்மா எனக்கு மருந்துகள் கொடுத்தாரென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. பின்னால்தான் புரிந்தது. மொத்தம் ஐந்து மாதங்கள் கரூரில் நாடகங்கள் நடந்தன. பாலக்காடு பயணமானுேம்.

பழைய நாடகங்களுக்குப் புதிய மதிப்பு

பாலக்காடு கவுடர் தியேட்டரில் சிவலீலா தொடங்கியது. 1940இல் எங்கள் நாடகங்களுக்கு பாலக்காட்டில் இருந்த ஆதரவைவிட அதிக ஆதரவு இப்போது கிடைத்தது. மதுரை சிவ லீலாவுக்குப் பிறகு நாங்கள் சென்றவிடமெல்லாம் சிறப்புத் தான். நைந்துபோன பழைய நாடகங்களுக்குக்கூட ஒரு புதிய மதிப்பு ஏற்பட்டது. ஐம்பது ரூபாய் கூட வசூலாகாமல் இடைக் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மனோகராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடமின்றித் தவித்தது எங்களுக்கே வியப்பாக இருந்தது. மனோகரனாக நான் நடித்த போது, புதிய புதிய கட்டங்கள் சிலவற்றை மக்கள் ரசனை உணர்வோடுகை தட்டிப் பாராட்டினார்கள். இராமாயணம் நாடகத்திற்கு அதற்கு முன் கண்டிராத முறையில் நாடக வெறி பிடித்தவர்களைப் போல ரசிகப் பெருமக்கள் நாலா