பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422

மென்றும் பெரியவரின் ஒப்புதல் இருந்தால் இதனுள் இருக்கும் கடிதத்தை இராமசாமியிடம் கொடுக்கலாம் என்றும் எழுதப் பெற்றிருந்தது. உள்ளே இராமசாமிக்கு ஒரு கடிதமும் இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கடிதத்தைப் பெரியண்ணாவிடம் காட்டினேன். என். எஸ். கே. இராமசாமிக்கே நேராக எழுதாமல் எனக்குக் கடிதம் எழுதியதற்காக அவரைப் பாராட்டினார் அண்ணா. “இராமாசாமி தாராளமாகப் போய் நடிக்கட்டும்; அவன் திரைப்படத்தில் நடித்தால் நமக்குத்தானே பெருமை! எப்பொழுது தேவையோ அப்பொழுது அனுப்பலாமென்று நான் சொன்னதாகக் கிருஷ்ணனுக்கு எழுது” என்றார். அண்ணா சொன்னபடியே கலைவாணருக்கு எழுதினேன். கடித்ததையும் இராமசாமியிடம் கொடுத்தேன். இராமசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. அண்ணாவின் அனுமதியோடு கலைவாணருக்குக் கடிதம் எழுதினார். நாலைந்து நாட்களில் உடனே புறப்படும்படியாகக் கலைவாணரிடமிருந்து தந்தி வந்தது. அன்றிரவே இராமசாமி சென்னைக்குப் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமாக இருந்த கே. ஆர். இராமசாமி கண்கலக்கத்துடன் விடைபெற்றுச் சென்னைக்கு சென்றார்.

மயங்கி விழுந்தேன்

அப்போது மயில் ராவணன் தொடர்ச்சியாக நடந்து வந்தது. நான் அதில் இராமர் போடுவது வழக்கம். சிறிய வேடம் அது. இராமசாமி ஆஞ்சநேயராக நடிப்பார். அவர் போன அன்று நானே ஆஞ்சநேயராக நடிக்க நேர்ந்தது. அதுவரை மயில் ராவணன், இராமாயணம் ஆகிய நாடகங்களில் நான் ஆஞ்சநேயர் பாத்திரத்தை ஏற்றதே இல்லை. அதுமட்டுமல்ல; சுக்ரீவனாகவோ, வாலியாகவோ கூட நடித்ததில்லை. குரங்குகளுக்குரிய உடையை அன்றுதான் முதலாவதாகப் புனைந்தேன். ஏப்ரல் மாதம் அது. உள்ளே ஒரே புழுக்கம். ரோமம் போன்று அடுக்கடுக்காக வைத்துத் தைக்கப்பட்ட அதிகக் கனமாக உடையைப் போட்டேன். தலையில் குல்லாவையும் வைத்துக் கட்டினேன். அதன்மேல் கிரீடத்தை வைத்தேன். உடலுக்குள் காற்று புகுவதற்கு வழியே இல்லை. வியர்வை கொட்டியது. துடைக்கவும்