பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

வாக்களித்தார். பெரியண்ணாவின் ஒப்புதலோடு சென்னையில் அதற்கான வேலைகளைத் தொடங்கினார். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அதற்குப் பொறுத்தமான நிழற்படங்களை வரைய ஏற்பாடு செய்தார். நாடகத்தை மூன்று அங்கங்களாகப் பிரித்து, மொட்டு, மலர், மணம் என்று மூன்று அங்கங்களுக்கும் பெயர்சூட்டி ஒவ்வொன்றுக்கும் தனியேஒவியங்கள் தீட்டச் செய்தார். சென்னை கமர்ஷியல் பிரிண்டிங் அச்சகத்தில் பில்ஹணன் அச்சாகிக் கொண் டிருந்தது, ஈரோட்டில் நடந்த தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டு நடவடிக்கைகளையும் அப்படியே அச்சிட விரும்பினார். மாநாட்டின் செயலாளர் சிவதாணு. அந்நூல் காரைக் குடி குமரன் பவர் பிரஸ்ஸிலேயே அச்சிடப்பெற்றது. மேலட்டையை மட்டும் சென்னையிலேயே அச்சிட ஏற்பாடு செய்தோம். இருநூல்களுக்குமான வரைபடங்கள் சென்னையிலிருந்து வந்தன. இவை சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க நான் சென்னைக்குப் பயணமானேன்.

சென்னையில் கலைவாணரைச் சந்தித்தேன். ஜூபிடர் அலுவலகத்தில் ஏ. எஸ். ஏ. சாமியைப் பார்த்தேன். பில்ஹணன் நாடக நூலின் மேலட்டை மிக அழகாக இருந்தது. கண்ணைக் கவரும் முறையில் அச்சிடப் பெற்றிருந்தது. நடிப்பிசைப் புலவரையும் பார்த்தேன். நான்கு நாட்கள் அங்கு தங்கினேன். நாடகக் கலை மாநாட்டு நூலின் மேலட்டையையும் பில்ஹணன் நாடக நூலையும் விரைவாக அனுப்பச் சொல்லி விட்டுக் காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன்.

நாடகக்கலை மாநாட்டு நூல்

நாடகக்கலை மாநாட்டு நூல் அழகாக அமைந்தது. அப்போது தமிழ் நாட்டிலிருந்து வந்த அத்தனை நாடக சபையினரும் விளம்பரம் கொடுத்து ஆதரித்தனார். மாநாட்டுக்கு,

நன்கொடை வரவு ரூ. 1154-00

மாநாட்டன்று டிக்கட் விற்பனை வரவு ரூ. 1819-00

ஆக மொத்த வரவு ரூ 2973-00
2973–0–0

செலவு விபரம் ரூ. 2365-3-0

இருப்பு ரூ. 607.13-0