பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540


அவர் ஆர்வத்தோடு இசைந்தார். சிவாஜி பத்திரிசை அலுவலகம் சென்று நண்பர் திருலோகசீதாராம் அவர்களையும் அழைத்தோம். அன்று எங்களோடு புறப்பட அவருக்கு வாய்ப் பில்லை. மீண்டும் வானெலி நிலையம் சென்றோம். அங்கு எதிர்பாராது பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களே ச் சந்தித்தோம். அவரும் எங்களோடு புறப்படச் சம்மதித்தார். அன்றிரவே செங்கோட்டைப் பாசஞ்சரில் ஐவரும் நெல்லைக்குப் பயணமானோம். இடநெருக்கடியால் பயணம் மிகவும் சிரமமாக இருந்தது. 22-4-48இல் காலை 10-மணிக்கு திருநெல்வேலி வந்து கஸ்தூரிகபே'யில் தங்கி உணவருந்தினோம்.

செல்லம்மா பாரதியைச் தரிசித்தோம்!

பாரதியின் துணைவியார் திருமதி செல்லம்மாபாரதி அவர்களையும், அவரது மூத்த மகள் திருமதி தங்கம்மா பாரதி அவர்களையும் அவர்கள் இல்லத்திற்குச் சென்று சந்தித்தோம்; பாரதி பாடல்களைத் தேசத்தின் பொதுச் சொத்தாக்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்று திருமதி செல்லம்மாபாரதி எழுதிக் கொடுத்தார். திருமதி தங்கம்மாபாரதியும் அதில் கையெழுத்திட்டார். அதன்பின் நெல்லை நகரசபைத் தலைவர் திரு ப. ரா. அவர்களைக்கண்டு பேசினோம். இரவு தாமிரபரணி சிந்துபூந்துறையில் நாங்கள் ஐவரும் மற்றும் நெல்லை எழுத்தாள நண்பர்கள் சிலரும் கூடினோம். பாரதியின் கவிதைகளே நான் உரத்த குரலில் பாடி எல்லோரையும் மகிழ்வித்தேன். மறுநாள் பிற்பகல் பேராசிரியர் அ. சீ. ரா. அம்பாசமுத்திரம் சென்றார். மற்ற நால்வரும் ஊருக்குத் திரும்பினோம். திண்டுக் கல்லில் நண்பர். கே. பி. கணபதியை வழியனுப்பிவிட்டு மற்ற மூவரும் கோவை வந்து சேர்த்தோம். மறுநாள் இரவு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன் இருவரும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். புனிதமான இந்தப் பாரதி விடுதலைப் பயணம் வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்தி அவர்களிருவரையும் வழியனுப்பிவைத்தேன்.

திரு நாரண-துரைக்கண்ணனிடமிருந்து இரண்டாம் நாள் கடிதம் வந்தது. பாரதி விடுதலைக்குத் தம் அருமை மகனைப் பலி கொடுத்து விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். நாங்கள்