பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

541


திருநெல்வேலியிலிருந்த 23. 4. 48 இல் அவரது அருமைத் திரு. மகன் காலமாகி விட்டான். துரைக்கண்ணன் போயிருக்கும் இடம் தெரியாத காரணத்தால் அவருக்குத் தகவல் கொடுக்க இயலவில்லை. மகனின் சடலத்தை வைத்துக்கொண்டு அன்று முழுதும். துரைக் கண்ணனே எதிர்பார்த்திருக்கிறார் அவரது துணைவியார். பயனில்லை. 26.4-48 இல் துரைக்கண்ணன் அவர்கள் தம் இல்லத் திற்குச் சென்ற பிறகுதான் செல்வமகன் மறைந்து விட்ட செய்தி தெரிந்தது. சடலத்தைக் கூடப் பார்க்க முடியாமல் போய். விட்டதே என்று கதறியழுதிருக்கிறார் துரைக்கண்ணன், என்ன செய்வது? சகோதரருக்கு ஆறுதல் கூறி, நீண்ட கடிதம் எழுதினேன்.

1. 5.48இல் கோவைக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு காமராஜ் அவர்களேக் கண்டேன். பாரதி பாடல் விடுதலை சம்பந்தமாக, பாரதியின் துணைவியாரைச் சந்தித்த, விபரங்களை அவரிடம் கூறினேன். சென்னை ராஜ்ய முதலமைச்சர் விரைவில் அதுபற்றி நடவடிக்கை எடுத்துக்கொள்வாரென தலைவர் காமராஜ் அவர்கள் உறுதி கூறினார்.