பக்கம்:என் தந்தை தாயர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2]

ஏமாந்த இரண்டு திருடர்கள்

5

பக். அந்த அறைக்கு கன்னம் வைக்க முடியரதாயிருந்தா இத்தனி நாளு வைச்சிருக்க மாட்டேனா? - அது கருங்கல் கட்டடண்டாப்பா ! பூட்டெ ஒடைக்க என்னாலே முடியலே - என்னமோ ஜப்ஸ் லாக்கம் - கெட்டெ பாராயாலே கூட ஒடைக்க முடியலே.

பலே. அப்போ அவர் தூங்கும் போது, சாவியே தபாய்ச்சிகினு, அறையே தெறந்துதான் எடுக்கனும்.

பக். ஆமாம் அப்புறம் அவர் முழிச்சிகினா - நம்போ சட்னி தான்! -அவர் இந்த வயசுலே கூட தினம் நூறு தண்டால் எடுக்கறருடா.

பலே. அப்போ என்ன செய்யரது அண்ணா?

பக். பாக்கலாம்-அவர் கிட்ட ஏதாவது வேலைக்காரருங்களா அமரலாம். அப்புறம் ஏதாவது சமயம் பாக்கலாம் - அடடெ !- கப்சப் - அதோ வர்ராப் போலேயிருக்குது.

அப்பாசாமி முதலியார், உள்ளேயிருந்து வருகிறார்.

அ. [திண்ணை மீது உட்கார்ந்து] அப்பாடா! - என்ன, காலம் கெட்டுப் போயிருக்குது

பக். என்ன தாதா சமாசாரம்,

அ. வேறே என்ன சமாசாரம் ? எல்லாம் திருடர் சமாசாரம் தான்-இந்த ஊர்லே திருடர் பயமதிகமாயிருக்குது, நம்ப கையிலே இருக்கர கொஞ்சம் நகை நட்டையெல்லாம் பக்கத்துாரிலிருக்கும் நம்ப மச்சான் கிட்ட கொண்டு போய் வைக்கலாம் இண்ணு பாத்தா -அவன் என்ன செய்தான் இண்ணா “ஐ ஐயோ ! இங்கையா கொண்டாந்தைங்க - இந்த ஊரிலே திருடர் காபுரா ரொம்ப அதிகமாயிருக்குதே - என் கிட்ட இருக்கர சவரன் நகையெல்லாம் இந்த பெட்டியிலே போட்டு வைச்சிருக்கிரே - நீங்க அத்தெயெடுத்தும் போயி, உங்க வீட்லே வைச்சிவையுங்க இந்த திருடர் குபார் அடங்கர வரைக்கும்” இண்னு சொல்லி எங்கிட்ட கொடுத்தனுப்பினான். உம் - என்ன செய்யரது -அந்த பெட்டி யெல்லாம் தூக்கிகினு வந்து, அந்த உள் அறையிலே வைச்சி பூட்டு விட்டு வந்தேன்!-- என்ன பொழைப்பு பொ ! எங்கே பார்த்தாலும் திருடர் பயமிண்ணா !