பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 37 தின் நலிவை மீாத்திரம் குறிக்கோளாகக் கொண்டிருக்க வில்லை. நமது நாடு வாழ்வதா, வீழ்வதா என்ற அபா யமான கேள்விக் குறியை எதிர்நோக்கி நின்றுகொண் டிருக்கின்றது. பல் வெளிநாட்டு நீதிமான்கள் கேலி செய்யும் அளவுக்கு நிலை தவறி நடந்துகொண்ட நீதி மான்களே நல்வழிபடுத்தவும் இ ந் த வழக்கின் உண்மையைப் பகிரங்கமாக வெளியே கொண்டுவந்து நிறுத்தி.எது சரி என்பதைக் கண்டுபிடிக்கும் மகத்தான தோர். பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பொதுமக்கள், எண்ணிக்கையிலே நானும் ஒருவன் என்ற உரிமையின் பேரால், இந்த் நாட்டின் வீழ்ச்சியிலே சந்தோஷப்பட இஷ்டபடாத நான் என் தைரியத்தின் ஆணையாகச் சட்ட வரிகளின் மீது குற்றம் சாட்டுகிறேன். ராஜ விசுவாசப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக் கொண்டு இதுவரை ஒரு குற்றமும் செய்தறியாத டிரைபஸ், தன் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களுக்குச் சரியான ஆதாரங்களைத் தயார் செய்வதற்கு நியாயமாக வழங்க வேண்டிய காலத்தையளிக்காமல் கண நேரத் தில் தகாத தீர்ப்பைச் சொல்லி, வஞ்சத்தை முடித்துவிட் டோம் என்று சொல்வதற்குப் பதில், நாகரிகத்தொனி யில், கடமிையை முடித்துவிட்டோம் என்று உள்ளுக் குள்ளாகவே சிரித்துக் கொண்டிருக்கும் சிலமற்றவர்கள் மீது நான் குற்றம் சுமத்துகிறேன். - தனிப் பெருந் தல்வ்ரே! அநீதிக்கு நீண்ட நாட் கள் அரகோச்சும் வன்மையில்லை யென்பதும், நீதியை வெல்லும் ஆற்றல் அநீதிக்கு என்றுமே இருந்ததில்லே என்பதும். தெரிந்திருந்தும் தெரியாதவர்களைப் போல் பாசாங்கு செய்யும் பாவிகளனைவரையுமே நான் குற்றம் சுமத்துகிறேன். ... - - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/38&oldid=759926" இலிருந்து மீள்விக்கப்பட்டது