பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 எமிலி ஜோலா விசாரிப்பதைப்போல் பாசாங்கு விசாரணை நடத்தி அந் தத் துரோகியை விடுதலை செய்துவிட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின்மீது குற்றம் சுமத்துகிறேன் நான் இந்தப் பிரெஞ்சு நாட்டின்மீது குற்றம் சுமத்து கிறேன். - இவர்கள் யார் பேரிலும் எனக்குக் குரோதமோ, வஞ்சமோ இல்லே. ஆணுல் அவர்கள், வளர்ந்துவரும் சமூகக் குழந்தையின் நெஞ்சை நெறித்துக் கொல்லத் துணியும் கொலேகாரர்கள். ஆகையாலேதான் சமூக வளர்ச்சிக்குண்டான உண்மையையும், நீதியையும், விசு வாசத்தையும் கண்டுபிடிக்க வேண்டுமென்று என் உள் ளம் தூண்டியதால் இதை உங்கள் கவனத்துக்கும் முடி வுக்கும் கொண்டுவந்திருக்கின்றேன். ஆகவே எண்ணரிய மக்களே நல்வழிப் படுத்த வகை யில்லாது கொலே, கொள்ளே பழி தீர்க்கும் பழக்கம் ஆகிய பல அக்ரமங்களைச் செய்து செய்து பழகிவிட்ட இறந்த காலத்தின் மீது குற்றம் சாட்டுகிறேன். வறுமையால் வாடிலுைம், பெருமை குன்றிலுைம் வளம் வறண்டு போனுலும், நிலமை எப்படித் தலே கீழாக மாறிலுைம், நீதியை மாத்திரம் மிறக்காமல் இருக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தை, உயிரோடு புதைத்துவிட்ட புல்லர்களைக் குற்றம் சுமதி துகிறேன். . . - குற்றம் சாட்டப்பட்டுப் பூதத் தீவிலே (Devils Island) காவலில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவத் தலைவன் டிரைபஸ் சம்பந்தமாக ஏற்பட்ட இந்த வழக் கின் முடிவு அவனுடைய வாழ்நாளே மாத்திரம் குறி பார்த்திருக்கவில்லை. அல்லது அவனுடைய குடும்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/37&oldid=759925" இலிருந்து மீள்விக்கப்பட்டது