பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 39' என்ன அவதிக் குள்ளாக்கலாம் என்பது எனக்குத் தெரி யும். என்ருலும் கவலையில்லை. நான் நீதிவேண்டுகிறேன். குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டது. விளக்கமான மறு விசாரணை நடப்பதாக. - அச்சகத்தின் முன்னல் அரோரி பத்திரிக்கை வெளியாகும் அச்சகத்தின் முன்னல் லட்சக்கணக்கான மக்கள். இந்த குற்றச் சாட்டை எந்தி வெளிவந்த பத்திரிக்கை இரண்டு மணி நேரத்தில் 3; லட்சம் பிரதிகள் செலவாய் விட்டன. பிரான்சில் இந்தப் பத்திரிக்கையை ஏந்தாத கைகளே. இல்லை. இதே செய்தி எங்கும் பொங்கி வழிந்தோடு: கிறது. சர்க்கார் கண்களுக்குச் சிங்கமாகத் தோன்றி. ன்ை ஜோலா. இராணுவ முகாம் கண்களிலே கனல் பறக்கிறது. பாரீஸ், பிரான்சு, பார் முழுதையுமே இந்தச் செய்தி கவ்விவிட்டது. கைகளே முறித்துக் கொள் கின்றனர். எவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த செய்தியை இவ்வளவு பகிரங்கமாக்கி விட்டான் 'எப்படி முடிந்தது இவல்ை? என்ன இருமாப்பு இந்த எழுத் தாளனுக்கு? எவ்வளவு வல்லமை இவன் பேணுவுக்கு.? என்ன நெஞ்சழுத்தம் இந்த ஆசிரியனுக்கு? சும்மா விட்டுவிடக்கூடாது. இராணுவத்தைப் பார்த்துப் பலர் நடுங்க வேண்டியதற்குப் பதிலாக இனி ஏளனமாக சிரிக்க வைத்துவிட்டான். செல்வாக்குப்பெற்ற இராணு. வத்தைச் சந்திக்கிழுத்துவிட்டுவிட்டான். கபடத் திரையைக் கிழித்து நம் முகத்தில் க்ரிபூசிவிட்டான். வரட்டும், வரட்டும் இந்த வழியாகத்தானே வருவான்; என்று வஞ்சினம் கூறிக்கொண்டு நிற்கின்றனர், இராணு வத்தாரால் கூலிக்காக அமைக்கப்பட்டிருந்த காலிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/40&oldid=759929" இலிருந்து மீள்விக்கப்பட்டது