பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - எமிலி ஜோலா பண்படுத்திய்ை. என் கருத்துக்களுக்கு உன் இலக்கிய மன்றத்தில் இடமளித்தாய். தாயே! நான் ரொட்டித் துண்டுகளுக்காக தெருத்தெருவாகத் திரிந்தபோது இந்த அருமையான பேணுவை என் கையில் கொடுத் தாய். வழுக்கி விழுந்த மங்கை நாணுவுக்காக நான் இட்ட கருத்துக்களே அகில உலக இலக்கிய அரியா சனத்தில் அமர்த்தி விட்டாய். இதைவிட ஒரு தாயகம் வேறு என்ன செய்துவிட முடியும்? இனியும் நான் உன்னிடம் எதையும் எதிர்பார்த்து உன்னத் தொல்லே கொடுக்க மாட்டேன். அவ்வளவு பேராசைக்காரனல்ல. நான். ஆல்ை இறுதியாக ஒன்றே ஒன்றை எதிர்பார்க் கின்றேன். அதுவும் என் பொருட்டல்ல, உன் பொருட்டு' அதுதான் நீதி. -- உன்னத்தட்டி எழுப்புவதால் ஒரு பெரிய ஆபத்து என் பின்னல் இருக்கின்றதென்று எனக்கு நன்ருகத் தெரியும். என்ருலும் நான் தைரியத்தைக் கைவிட்டு கோழையைப் போல் உன்னேக் கைவிட மாட்டேன். ஒவ் வொரு உதயத்திலும் என்னத் தாக்குவதற்கென்றே நூறு பத்திரிக்கைகள் எழுத்திட்டிகளே ஏந்தி வெளியே வருகின்றன. உன்மேல் நான் கொண்டிருக்கும் ப்ாசத் தால் அவைகளைத் துச்சமென மதிக்கின்றேன். அந்த நூறு பத்திரிக்கைகளும், அதைப் படித்துப் பர்ர்க்கும் பாமர மக்களும் டிரைபசின் மரணத்துக்காக் அன்ருடம் ஜெபம் செய்து கொண்டிருக்கின்ருர்கள். அவர்கள் எண்ணமும் முடிந்து டிரைப்சும் மாண்டுவிப் டால், அதுவே அவர்கள் உனக்குச் செய்யும் உதவியும், நன்றி கலந்த வணக்கமும் என்று கருதுகிருர்கள். தர்க்க வாதிகளும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/43&oldid=759932" இலிருந்து மீள்விக்கப்பட்டது