பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 4 | கடமையை சரிவர செய்துவிட்டாய் என்று என்னப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமாட்டேன். என் ? அறிஞர் உலகமும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளாது: நீ இந்த விஷயத்தில் பராமுகமாக இருந்து விட்டால் எல்லாப் பழியும் உன்மேல் விழுந்து விடும் என்பதை நீ தயவுசெய்து உணரவேண்டும். வெறியேறி அலேயும் தாயின் மானத்தைக் காக்க விரைந்தோடும் தனயன் போல் உன்னல் எனக்கு எவ்வளவு அவமானம் நேர்ந் தாலும், நீ என்னை ஈன்றதாய் என்ற பரிபூரண அன்பால் வழியும் ஆனந்த கண்ணிரின் சாட்சியாகச் சொல்லு கின்றேன். அவர்கள் உன்னே அவமானப்படுத்துகிருர் கள். நீயும் பலர் வெளியிடும் பொய்ச் செய்திகளே நம் பும் பத்திரிகைகள் போல் நம்பி மோசம் போகிருய். எப்படி இந்த வஞ்சகர்கள் உன் குழந்தைகளாகப் பிறந்தார்கள் என்று எனக்கே தெரியவில்லை. அன்னேயே! உன் அருமை மைந்தர்கள், இந்த ஒரு சில வஞ்சகர் களாலும், பொருமைக்காரர்களாலும், கொலேகாரர் களாலும் நடத்தப்படுவதை நீ உண்மையாகவே அனு: மதிக்கிருயா ? பாவம், அந்தப் பாமர மக்கள் இந்த வஞ்சகர்களின் பின்னல் நின்று சவக்காடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்ருர்கள். இந்த நிலமையை நீ இப்படியே நீடிக்க விடுவாயானல். டிரைபஸை விடு விக்க மற்ருேர் பாஸ்டில் சிறையின் பயங்கரச் சம்பவம் நடந்தே இரும். - இந்தத் துர்பார்க்கிய நிலையைக் காண உன்னுடைய அன்பான குழந்தைகள் வெட்கப்படுகின்ருர்கள். நான் எல்லாவற்றையும் தைரியமாகச் சொல்லுகிறேன். ஏனென்ருல், நான் எல்லாரையும் விட உன்ன அதிக மாக நேசிக்கின்றேன். பாழ்பட இருந்த என் வாழ்வைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/42&oldid=759931" இலிருந்து மீள்விக்கப்பட்டது