பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 எமிலி ஜோலா மனப்பான்மை நீதிக்கு இருக்குமானல், அதை நம்பி வாழ்கிற நாடு சிதைந்து சின்னபின்னப்பட்டு சீரழிந்து விடும் என்று நினைத்து நான் மிக மிக அஞ்சியதால் அந்த அறிக்கைகளே வெளியிட்டேன். - நீதி தவறி நடந்த கிரேக்கத்திலும், அநீதியை அரி யாசனமேற்றிய ரோமிலும், வாய்ப் பதட்டமான அலாஸ்காவிலும் தற்பெருமை கொண்டாடிய பிரிட்ட னிலும், தருக்கர் உலாவிய அமெரிக்காவிலும் செருக் குடன் நடந்த சீனத்திலும் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூட்ாது. ஏன் ? நமது நாட்டிலேயே இந்த நூற்ருண்டில் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிடமாட்டோம். : நீதி எக்காரணத்தாலோ ஒரு சில சுயநலமிகளிடம் அவர்களுடைய அக்ரம ஆர்ப்பாட்டங்களுக்குப் பயந்து ஒரு தூய்மையின் சின்னத்தைச் சரியாக அடையாளந் தெரிந்துகொள்ள முடியாமல் தினறுகிறது. ஆகவே நீதியைத் தலைகுணிய வைத்திருக்கும் அநீதிக்குப் பயந்து அதன் இஷ்டம் போல் வழிவிட்டு நம் போன்ற நீதித் தாகம் கொண்டவர்கள். பேசாமல் இருந்துவிட்டால் அந்த அக்ரமத்துக்கு நமது தாயகம் இரையாய் அகில உலக நீதிச் சிங்காதனத்தின் நிழலிலேகூட நிற்க அரு கதையற்றதாகிவிடும். - ஆகவே நீதியைத் தயவு செய்து வெளியே வரும் படி என் நேசக் கரங் கொண்டு அழைக்கிறேன். அது ஒருவனுடைய தவருண பாதைக்கு நிச்சயமாக இடங் கொடுக்கா தென்று உறுதியாக நம்புகிறேன். ஆகவே நியாய சிந்தை ஒன்றினுல் தான் பாரபட்சமற்ற விசா ரண ஒன்றில்ைதான் இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/47&oldid=759936" இலிருந்து மீள்விக்கப்பட்டது