பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 63 கொண்டாட்டங்கள் உனக்குத் தெரியாது. நான் வேண்டுமானல் குனிகிறேன். நீ என் முதுகின் மேல் ஏறிச்சாளரத்தின் வழியாகக் கிழக்கே பார். . இரா ணுவ முகாமில் பறக்கும் புதுக்கொடியை. நேற்று - மாலை யூத எதிர்ப்பு சங்கத்தில் அனைவருக்கும் போதை விருந்து. அந்த போதையால் அரோரி பத்திரிகைக் கூடம் நாசமாக்கப்பட்டது. ஆசிரியன் பைரன் தண்டிக்கப்பட்டு அவனுக்கும் கடுங்காவல் தண் டனே . இந்தச் சிறைச்சாலைக்குத்தான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன். நீ ஒரு பெரிய சட்டஞானியென உன்னே நம்பி, எதிர்நோக்கி யிருந்த அபாயங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கா மல் வெளியிட்டானே அவனுக்கு நீ உதவி செய்ய வேண்டாமா? நீ ஒருவன்தான் உண்மையான நீதி மானுக இருக்கின்ருய் என்று திடமாக நம்பி உன் னிடம் சகல ஆதாரங்களையும் தந்து உன் உதவிக் காகக் கையேந்தி நிற்கும் டிரைபஸ் குடும்பத்தாரை நீ காப்பாற்ற வேண்டாமா - எங்கேயோ ஒரு திவில், யாரோ ஒருவன் இருக்கின்றன், நமக்கென்ன அத ல்ை என்று அலட்சியமாக இராமல் ந்ாட்டின் நலிவைப் போக்கி அந்த நிரபராதியை விடுவிக்க வேண்டுமென்றும், அல்லும் பகலும் வியர்வை சொட்டச் சொட்ட எழுதி எழுதிக் குவித்தாயே, அதை நாட்டார் மதிக்க நீதித்தாகம் கொண்டு நாடெல்லாம் சுற்றித் திரிந்தாயே, அந்த நீதி நிலை பெறவேண்டாமா? "உண்மையாகவே டிரைபஸ் குற்றமற்றவயிைன் ஜோலாவின் எழுத்துக்கள் சாகா வரம் பெறுக ” என்று வாழ்த்திய நல்லோர்கள் நாட்டில் நட o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/64&oldid=759955" இலிருந்து மீள்விக்கப்பட்டது