பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 & எமிலி ஜோலா மாட வேண்டாமா ? ஜோலா ! என் அருமை நண்பனே ! ஈடிணையற்ற எழுத்தாளனே !! செலானே உன்னிலும் அறிவுடையவனல்ல. எனினும் உன் நிழல் பட்டவன் என்பதையும், உன் வாழ்விலும் தாழ்விலும் உன் நிழல்போல் தொடர்ந்தவன் என் பதையும் மறந்துவிடாதே. வா, வெளியே. மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம் போராட் டத்தை. நாட்டின் எல்லக்கப்பாலிருந்து தொடங் குவோம். நம்முடைய நிழல் தண்ணிரில் படுவதால் உடல் நனேந்துவிடுவதில்லை. அதேபோல், பிறர் நம்மைக் கேலி செய்வார்களாயின் அவமானம் நமக்கல்ல. அறியாமையால் செய்துவிட்ட அடாத செயலுக் காக அவமானப்பட வேண்டியவர்கள் அவர்கள், நாமல்ல. நாம் சிறையில் வாடுவதால் டிரைபசுக்கு விடுதலைக் கிடைத்து விடுமாயின் நமது உயிரை இதோ, இந்தத் தாண்ட முடியாத சுவர்களுக்குப் பலியாக்குவோம். அந்த அறிகுறியும் காணுேமே. ஆகவே நீதியை லே நாட்ட வெளியே வா. வீரர்

களே எதிர்த்த பேணு வீரனே வா, வெளியே.' ஜோலாவைக் காணுேம் மாலை உணவைக் கொண்டுவந்து பார்க்கிருன் சிறைக் காவலன். ஜோலாவைக் காணுேம். மேலதிகாரியிடம் தெரிவித்தான். பிரான்ச முழுவதும் தேடுகின்ருர்கள். இராணுவ முகாமுக்குக் கலக்கத்தையும் சர்க்காருக்குத் இகிலேயும் உண்டாக்கிவிட்டது. டிரைபஸ் சம்மந்தமாக ஏற்பட்ட அதிர்ச்சியைவிட இந்த சம்பவம் பெரிய பூகம்பத்தையுண்டாக்கிவிட்டது. எஸ்டரெஸி பற்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/65&oldid=759956" இலிருந்து மீள்விக்கப்பட்டது