பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 எமிலி ஜோலா சொல்லிப் புறப்பட்டார் தன் இராணுவ உடைகளைக் களேந்தெறிந்துவிட்டு. எங்கே ? என்ருள் மனைவி. ஏன் இவ்வளவு பரபரப்பு? என்ருன் சகோதரன் மேத்யூ. ' என் அண்ணல் ஜோலாவைக் காண' என்ருன், டிரைபஸ். ஜோலாவையா ? -என்று இழுத்தனர். கவனிக்கவில்லை. அந்தச் சமயம் அவனுக்கிருந்த ஆசையில், ஜோலா இறந்துவிட்டார் ' என்று சொல்லி யிருந்தால், டிரைபளவின் இருதயம் வெடித்திருக்கும். ஒன்றும் பேசாமல் புறப்பட்டார்கள். இராணுவ வீர னல்லவா ? வேகமாக நடக்கின்ருன். ஜோலாவின் வீட்டையடைந்தான். வீட்டிலிருந்த ஜோலாவின் பணியாள் அரசாங்க மரியாதைக்குரிய தலைவர்களே அடக்கம் செய்யும் இடத்தைக் காட்டின்ை. சந்தேகப் படவில்லை, டிரைபஸ் ஓடினன். இவர்களும் ஒடுகிருர் கள். கட்டிடத்தின் உள்ளே நுழைந்து இப்படியும் அப்படியும் பார்க்கின்ருன். கட்டிடத்தின் ஒரு பகுதியில் அழகான இடத்தில் ஒரு சமாதி. சுற்றிலும், பேராசிரி யர்கள், இலக்கியக் கர்த்தாக்கள், சட்ட நிபுணர்கள், சமர்க்களத்தலைவர்கள் முழங்காலிட்டுத் தலையைத் தாழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். சமாதியின் மேலே மலர் வளையங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எங்கும் நிசப்தம் பரவி இருக்கிறது. சுற்றுமுற்றும் பார்த்து விழிக்கின்ருன் டிரைபஸ். கல்லறைக்கருகில் போ எனச் சைகை செய்கின்ருள் மனேவி. பூட்சுகளின் ஒசை கேட் காமல் ம்ெ துவாக நடக்க ஆரம்பித்தான். யாரோ பேசும் சத்தம் கேட்கிறது, ஜோலாவா? என்ருன். இல்லே என்று தலையாட்டினுள் மேடம். - . - கல்லறை ஜோலாவின் கல்லறைக்கருகில் சிறந்த இலக்கியக் கர்த்தா அனதோல் பிரான்சு உணர்ச்சிமிக்க சொற் பொழிவாற்றிக்கொண்டிருக்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/87&oldid=759980" இலிருந்து மீள்விக்கப்பட்டது