பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 87 'நீதி, உண்மை இவைகளைத் தவிர்த்து, வேறெது வும் அமைதியை வழங்காது. பாவம் ! இந்தக் கல்லறை யில் தூங்கும் ஜோலாவின் வாழ்நாளெல்லாம் அமைதி யில்லாமலே முடிந்து விட்டன. ஆல்ை, ஜோலா உலக உணர்வின் தொடக்கத்தைக் குறிப்பவர். இலக்கியத்தில் ஜோலா தன்னுடைய ஏடுகளின் அளவில்ை மதிப்பெய்தவில்லை. எளிய நடையில், ஒளி விட்ட கருத்துக்களுக்காக ஏழை எளியோரைப்பற்றித் திட்டிய கருத்தோவியங்களுக்காக, மூடத்தனம், வெளி வேடம், அநீதி, சுரண்டல் முறை, ஆணவ வெறி, குறுகிய மனப்பான்மை, போர், பேராசை, ஒடுக்கப்பட்ட மனிதப் பிராணிகளின் புலம்பல் இவைகளைப்பற்றி எழுதியதற்காகமட்டுமல்ல, சமயம் நேர்ந்தபொழுதெல் லாம் தனது தள்ளாத வயதில் பலமிக்க இராணுவம், அதிகாரமுள்ள அரசாங்கம் அனைத்தையும் எதிர்த்துத் தனியணுக நாட்டையும் வீட்டையும் விட்டோடி அஞ்சாது போராடியதற்காக ஜோலர் உலக வரலாற் றிலே இடம் பெற்றுவிட்டார். - பிரெஞ்சு நாட்டுக்கு ஒருவன் தன் உழைப்பைப் பல வகையில் செலுத்தலாம். ஒருவன் வாளேந்தியோ, பேனு வைப் பிடித்தோ, தன் கடமையை நிறைவேற்றலாம். ' என்பங்கில் எமிலி ஜோலா என்ற பெயரை வருங் காலத்துக்கு வழங்குகின்றேன். அது இரண்டிலொன்றை அடைவதாக,' என்று கூறினர். வருங்காலம் பின் சந்த்தி எல்லாம் ஜோலாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஜோலா ஒய்வேயறியாத உழைப்பாளி. அவனுடைய வாழ்வு, ஏற்றத்தாழ்வுகளும் ஏமாற்றங்களும் நிறைந்த தாயிருந்தது. குறிப்பாகப் பிரெஞ்சு இலக்கிய மன்றம் அவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க மறுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/88&oldid=759981" இலிருந்து மீள்விக்கப்பட்டது