பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிநட்சத்திரம் e 150 காட்சி 23

நேரம் : காலை இடம் : பேராசிரியர் மேகலையின் விடு உறுப்பினர் : மேகலை, நம்பி

பேராசிரியர் மேகலை, வீட்டின் முற்றத்திலிருந்ததோட்டச் செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார், அவருடைய கலைந்த கேசம் முன் பக்கமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. சேலையின் கொய்சகத்தைத் தூக்கி இடுப்பில் செருகியிருக்கிறார், அந்தக் கோலத்தில் அவர் ஒரு பட்டணத்துச் சகுந்தலையாகக் காட்சியளிக்கிறார். அப்போது நம்பி உள்ளே நுழைகிறான். நம்பி;

பேராசிரியருக்கு வணக்கம்.

மேகலை:

வாழ்த்துக்கள்! வாநம்பி ! என்ன, இந்த அதிகாலை நேரத்தில்.?

(திருமண அழைப்பிதழ் ஒன்றை நம்பி எடுத்து நீட்டுகிறான். மேகலை அவனை உற்று நோக்கி விட்டு அழைப்பிதழைப்பிரிக்கிறார்) நம்பி;

என் அண்ணன் நெடுமுடியின் திருமணம்.

மேகலை:

பெண்.?

தம்பி;

பஞ்சாபிப்பெண்.

காதல் திருமணம்