பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அதற்காக...

1

1962-ஜனவரி பதினெட்டாம் நாள்-வெள்ளியன்று நிகழ்ந்த சந்திப்புத்தான் முதலாவது நெருக்கமான சந்திப்பு. இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் கூடப் பாவேந்தரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கோழிக்கறி, இறால் போன்றவற்றைச் சமைக்கச் சொல்லி, "கூட்டிக் கொண்டுவா” என்று ஆளும் அனுப்பி வரவழைத்துச் சாப்பிடச் சொன்னார் பாவேந்தர். சந்தித்த சில நாட்களுக்குள்ளேயே அவர் உள்ளத்தை அதிகமாய் அள்ளிக் கொண்டு விட்டவர் வேறு யாருமில்லை, கவிஞர் முருகுசுந்தரம் தான்.

“பாவேந்தர்-ஒரு பல்கலைக் கழகம்” என்னும் நல்ல நூலைத் தந்துள்ள கவிஞர் முருகுசுந்தரம், அதனை அடுத்துத் தமிழுக்குத் தந்துள்ள நாடகப் படைப்புத்தான் எரிநட்சத்திரம்'.

“புதிய களங்கள்-புதிய போர்கள், புதிய வெற்றிகள்-இவைகளைப் புனையும் நாடகம் வேண்டி நம்மொழி கிடந்தது.” என்று இலங்கைக் கவிஞர் "மஹாகவி” வருந்திப் பாடிய குரலுக்குப் படைப்புத்திறத்தால் பதில் சொல்லியிருக்கிறார் கவிஞர் முருகுசுந்தரம்.

2

பழைமையும் பாரம்பரியமும் மிக்க தமிழ் இயலாய், இசையாய், நாடகமாய் விரிந்து பரந்து நின்ற வரலாறு வியப்பதற்குரிய வரலாறே! காய்த்துப் பழுத்துக் குலுங்கி நின்ற கன்னித்தமிழ் காலத்தின் கல்லடிபட்டு இழந்த கனிகள் ஏராளம்! குறிப்பாக நாடகத் தழிழுக்கு நிகழ்ந்த இழப்புகள் அதிகம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது அதற்குச் சற்று முந்தி நாடகத் தமிழ் உயர்ந்த நிலையில் இருந்தது என்று பெருமையுடன் சுட்டிக்காட்டும் பரிதிமாற் கலைஞர், தொடர்ந்து நாடகக்கலை