பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


வைக்கிற -மூளையைச் சிறிது குழப்பக்கூடிய பின்னால் நடை மற்றும் உத்திகள் கொண்ட கதை கட்டுரைகளை விரும்பிப் படிப்பதில்லை. இலகுவான ( லேட்டான ' ) சமாச்சாரங்களையே ஆவலுடன் வாசிப்பது வழக்கம். ஆழ்ந்து , கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய விஷயங்களைவிட , மேலோட்டமாகப் பார்வையை மேயவிட்டு இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களே அவர்களை ஈர்க்கும். அந்த விதமான கதைகளையே 'குமுதம்' தர முன்வந்தது.

கதைகளில் சுவையான கதை அம்சம் இருந்தால் பாதும். கலைத்தன்மை. நடைநயம், உளப் பரிசோதனை, எதார்த்தம், சோதனை முறை போன்றவை எல்லாம் தேவைல்லை. கிளுகிளுப்பு ஊட்டும் தன்மை அவசியம் வேண்டும். செக்ஸ் உறவுச் சித்திரிப்பு அதற்கு உதவும் - இப்படிச் சில அளவு முறைகளுக்கு உட்படுகிற கதைகளையே'குமுதம் ' பிரசுரிக்கிறது.

எழுத்தாளர்கள் அனுப்புகிற கதைகளை மாற்றியும் திருத்தியும், மூன்று பக்கங்களுக்குள் சுருக்கியும், இரண்டு பக்கக் கதை - ஒரு பக்கக் கதை என்று ஆக்கியும், இஷ்டம் போல் பிரசுரிக்கும் உரிமையை அது வைத்துள்ளது.

துணுக்குகள், சிறு சிறு தகவல்கள், கிசுகிசுக்கள், சினிமா நடிகையர் பற்றிய ரசமான குறிப்புகள் போன்ற விஷயங்களே அதிகம் தருகிறது.

இலக்கியரசிகர் ஒருவர் ஒருசமயம் குறிப்பிட்டார்: வரவர ஜனங்களின் டேஸ்ட் ( ருசி) மாறிப்போச்சு. ஹெவியான உணவுவகைகளை அவர்கள் நாடுவதில்லை. சிறுசிறு தீனிகள்