பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா. பார்த்தசாரதி) வருடாந்திரப் பஞ்சாங்கமான தீபாவளி மலரில் - ஒரு கட்டுரையில் சங்கராச்சாரியரைப் பற்றி எழுதப்பட்டிருந்த ஒரு கருத்தினில் தவறான முடிவு ஒன்று இருந்தது. அந்தப் பத்திரிகை முதலாளி தாமே நேரில் போய்ப் பெரியவாளிடம் கெஞ்சி வேண்டி அந்தக் கட்டுரையை வாங்கி வந்ததாக எல்லாரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் என்றும் கேள்வி. அந்த நிலையில் பத்திரிகையில் வருடாந்திரப் பஞ்சாங்கமான தீபாவளி மலர் வெளிவந்த மறுவாரம் - ஞானசூனியமான தன்னையே பத்திரிகையின் ஆசிரியராகவும் போட்டுக் கொண்டிருக்கும் மேற்படி வாரப்பத்திரிகையின் முதலாளி அவருடைய குடும்பக் காரியமாக மதுரைக்கு வந்திருந்தார். அப்போது நான் மதுரையிலிருந்தேன். தற்செயலாக அவரைச் சந்திக்க நேர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, "என்ன? நம்ப தீபாவளி மலர் எப்படியிருக்கு? என்று அவர் சம்பிரதாயமாக ஒருகேள்வி கேட்டுவைத்தார். சம்பிரதாயமாகக் கேட்கப்பட்ட அந்தக் கேள்விக்குச் சம்பிரதாயமாகவே நானும் பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. • . . . "மலரில் எடுத்த எடுப்பிலேயே சங்காராச்சாரியரைப்பற்றி எழுதியிருக்கிற கட்டுரையில் ஒரு பெரிய தப்பு இருக்கிறதே?" என்று அடிமடியைப் பிடித்தேன். ஆனால் அந்தக் குறையை அவர் சர்வசாதாரணமாக வரவேற்ற விதமும், அலட்சியமாகப் பதில் சொல்லிய தோரணையும் என்னை அயர்ந்துபோகச்செய்து விட்டன. . . . :ن 'இந்தப் பெரியவாள் பக்தி -பூரீ முகம் - கட்டுரை - தத்துவம் - இதிலெல்லாம் எனக்குப் பிரமாதமா ஒண்னும் நம்பிக்கை கிடையாது. ஏதோ பாமர ஜனங்களுக்கு இப்பிடி ஆசாரிய சுவாமிகளைப் பற்றியும், பக்தியைப் பற்றியும் ரெண்டு பக்கம் வரணும்னு ஒரு பிரமை இருக்கு மேர்ல் லியோ? அதுக்காகத்தான் இது மாதிரி எல்லாம் நடுநடுவே பக்தி விஷயம் ஏதாவது போடறோம். ஜனங்களுக்கு இதிலெல்லாம் மூடநம்பிக்கை-ஒரு விதமான பிரமை இருக்கு. அதனாலே இந்த மாதிரிக் கட்டுரைகளில் என்ன அபத்தம் இருந்தாலும் சரீன்னு அப்படியே போட்டுடவேண்டியது என்று சிரித்துக்கொண்டே கூறி மழுப்பினார்.அவர். அவருடைய ஆஸ்தீக வேடம் கண்களில்