பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ១េ H 1 G3 திலும் இருப்பதுபோல்தீரர்கள் பத்திரிகை தொழிலுக்கு வந்தால் இங்கேயும் முதலாளிகளின் கொட்டத்தை ஒரளவுக்கு ஒடுக்கலாம். "அப்படியானால் இங்கு மாத வாரப்பத்திரிகை களில் இப்போது தீரர்கள் இல்லையா?" என்று நீங்கள் என்னை ஒருகேள்வி கேட்கலாம். எப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் இங்கு இருக்கிறார்கள் என்பதை உங்களுக்குச்சொல்கிறேன். பத்திரிகையாளன் அல்லது எழுத்தாளன் - என்பவன் தன்னுடைய அறிவுச் செருக்கையோ, சுய மரியாதையையோ, தன்னை ஆள்வதாகவோ காப்பாற்றுவதகாவோ நினைத்துக் கொண்டு திரிகிற பத்திரிகை முதலாளி உணரும்படியாகச் செய்த சம்பவங்கள் இங்கு நம் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு. தன்னுடைய சொந்தப் பத்திரிகையில் வாரா வாரம் யார் யார் . எழுதுகிறார்கள், எப்படி எப்படி எழுதுகிறார்கள் என்பதைப் பத்திரிகை வெளிவருவதற்கு முன்போ, அல்லது வெளிவந்த பின்போ தெரிந்து கொள்ளக் கூட ஆசையோ, அவகாசமோ இல்லாத அலட்சியமான மனப்பான்மையுள்ள கொழுப்பெடுத்த முதலாளிகள் சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 'உங்கள் பத்திரிகையில் இந்த வாரம் இதைப்பற்றி எழுதியிருக்கிறார் களே?"-என்று இந்த முதலாளிகளிடம் யாராவது எப்பேதாவது கேட்டால் திரு திருவென்று ஒன்றும் புரியாமல் விழிப்பார்கள் அல்லது, அப்படியா? நான் பார்க்கவில்லையே? - என்று அசடு வழியப் பதில் சொல்லுவார்கள். இவையெல்லாம் எதைத் தெளிவாக்குவதாய் நினைக்கிறீர்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதுகிறவர்கள் அல்லது உதவியாசிரியர்களாக வேலை பார்க்கிறவர்களுடைய தன்மானத்தைப் பற்றியோ, சுயமரி யாதையை பற்றியோ - இந்த முதலாளிகளுக்கு அதிகம் கவலையில்லை. அக்கறையும் கிடையாது. கிளப்பில் பெருந் தலைகளோடு சீட்டாடுவது முதல் குதிரைப் பந்தயத்துக்குப் போவது வரை எத்தனையோ அக்கறையும் கவலையும் காட்ட வேண்டிய காரியங்கள் அவர்களுக்கு இருக்கும். உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை இங்கே வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். - இரண்டு மூன்று. ஆண்டுகளுக்கு முன்னால் அருள் வாக்குகளையும், ஆச்சாரிய சுவாமிகளையும் திடீரென்று கொண்டாடத் தொடங்கிய ஒருதமிழ் வாரப் பத்திரிகையின்,