பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வல்லிக்கண்ணன் H 105 நீர்மல்க சங்கராச்சாரியாரிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்பது எல்லாம் எத்தனை பெரிய மாய் மாலங்கள் என்று அன்றைக்குத்தான் நான் தெரிந்து கொண்டேன். தனக்கு நம்பிக்கையோ, பற்றோ இல்லாததைக் கூடப் போலியாக நடிப்பதும் பத்திரிகை தர்மம் என்று தான் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. டம்மி எடிடராக (பேருக்கு ஆசிரியராயிருப்பவர்) இருக்கிறவர்கள் எந்த எந்த விதங்களில் தகுதிக்குறைவாகவும், புத்திக்குறைவாகவும் நடந்து கொள்வார்கள் என்பதற்கு இன்னும் ஓர் உதாரண்ம் கூடக் கூற முடியும். - அதுவும் ஒரு தீபாவளி மலர்சமயம் தான். அதே வாரப், பத்திரிகை முதலாளிதான். அந்த ஆண்டில் தீபாவளியின் போது வெளியான தமது பத்திரிகையல்லாத மற்றப் பத்திரிகைகளின் தீபாவளி மலர்களை வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தார். இதென்ன ஆச்சரியமாயிருக்கிறது? இந்த ஆள் தன் பத்திரிகையைத் தவிர மற்றப் பத்திரிகைகளைக் கூடக் கையிலெடுத்துப்பார்க்கிறாரே என்று நான் தாங்க முடியாத வியப்புடனே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தபோது - மிக விரைவாக அசுர வேகத்தில் எல்லாப் பத்திரிகைகளையும் புரட்டிப் பார்த்து விட்டுக் கீழே போட்டு விட்டார் அவர் நான் ஆச்சரியம் மேலிட்டு அவரை வினவினேன் : 'என்ன இது? இவ்வளவு சீக்கிரமாகவா எல்லாப் பத்திரிகைகளையும் பார்த்து விட்டீர்கள்?" 'பார்க்கிறதாவது; ஒன்றாவது ? நான்பார்க்கிறதுக்கு என்ன இருக்கு இதிலெல்லாம்? எவ்வளவு அட்வர்டிஸ் மெண்ட்ஸ்' இருக்குன்னு ஒரு மாதிரி எண்ணிப் பார்த்தேன். வேறொண்ணு மில்லே ஒரு வேளை இவர்களுக்கு நம்மைவிட அட்வர்டிஸ் மெண்ட்ஸ் கூட இருக்குமோ என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு புரட்டுப் புரட்டினேன்!-என்றாரேபார்க்கலாம் அவர் தன் பத்திரிகையைவிட அடுத்த பத்திரிகையில் ஏதாவது நல்ல தரமான கதைகள், கட்டுரைகள், வந்திருக்குமோ என்ற பயத்தோடு அவர் மற்றைய பத்திரிகைகளைப் புரட்டவில்லை யாம். அட்வர்டிஸ்மெண்ட் ரெவின்யூ தன்னை விட அவர் களுக்கு அதிகமா அல்லது அவர்களைவிடத் தனக்கு அதிகமா