பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் } 109 கள் பலர் தொழில் பயத்துடனும் தன்னம்பிக்கையற்றும் வாழ்கிறார்கள், வேலை போய்விடுமோ? - வேலை போய்விடுமோ? என்று பயந்து நடுங்குகிறார்கள். பெரிய குடும்பத்தின் சுமையும் நகர வாழ்வின்சிரமங்களும் அவர்களை இப்படிப் பயந்தான் கொள்ளிகளாக ஆக்கியருக்கிறதென்பது உண்மையாயினும் உழைக்கும் பத்திரிகையாளன் என்ற தொழி லினத்தின் வீரத்தை மொத்தத்தில் மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு வழி செய்து விடுகிறார்கள். ஓரிருவரை வைத்து அளவு செய்யப்படும் இந்த மதிப்பீட்டைக் கொண்டு, 'உழைக்கும் பத்திரிகையாளர்கள் எல்லாரும் வக்கற்றவர்கள்போக்கில்லாதவர்கள்-இந்தத்துறையை விட்டு விட்டால் வேறு துறைகளில் முயன்று பிழைக்கவும் முடியாதவர்கள் - என்று கொழுப்பெடுத்த பத்திரிகை முதலாளிகள் எல்லாரும் முடிவு செய்கிறார்கள். முன்னர் குறிப்பிட்ட உதவியாசிரியர்களின் அனுபவங் களைத் தவிர - வேறு சிலவகை ஆட்களுக்கு வேறு விதமான அனுபவங்களும் உண்டு. அதையும் தான் கொஞ்சம் பார்க்க லாமே! துரதிர்ஷ்டவசமாக நான் வேலை பார்த்த ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில் - என்னோடு வேலை செய்த உதவியாசிரியர் ஒருவர் - என்னுடைய நாவல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசுவதற்கு இணங்கியிருந்தார். என் மேல் நிரம்பிய அன்புள்ள வராகவும், பிரியமுள்ளவராகவும், காண்பித்துக்கொண்ட சிலரில் அவரும் ஒருவர். நிகழ்ச்சிகள் நிரல்களிலும், விழாஅழைப்பிதழ் களிலும், சுவரொட்டிகளிலும் தாம் விழாவில் கலந்து கொள்ளும் இணக்கத்துடன் பெயரை வெளியிடவும் இசைவு தந்து விட்டார்.அந்த உதவியாசிரியர். யாவும் அச்சாகி விளம்பரங் களும் - விழாவைப் பற்றிய பத்திரிகை அறிவிப்புகளும் கூடச் செய்யப்பட்டாயிற்று. இந்த் நிலையில் எனக்கும் அந்தக் காரியாலயத்தாருக்கும் இடையே மனக்கசப்பு முற்றி உரிமைப் பிரச்சனை காரணமாக நான் அங்கிருந்து வெளியேற நேர்ந்து விட்டது, என்னுடைய நாவல் வெளியீட்டு விழாநாளோ, நான் அங்கிருந்து வெளியேறிய பின்பு ஒரு வாரத்துக்கு அப்பால் ஏதோ ஒரு தேதியிலே இருந்தது. நான் அங்கிருந்து வெளியேறிய பின்போ மேற்படி உதவி ஆசிரியருக்கு மனம் மாறிய பயம் வந்துவிட்டது. . - 'ஏன் ஐயா இந்தச் சமயம் பார்த்து அந்த மனிதருடைய