பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடிவாதக்காரர் நா.பா. கி. ராஜேந்திரன் நா.பா. ஒரு பிடிவாதக்காரர். அவருடைய பலமும் அதுதான்; பலவீனமும் அதுதான்! அவருடைய கதைகளின் கதாபாத்திரங் களைப் பாருங்கள்; கதாநாயகன் கடைசி வரை பிடிவாதத்துடன் நல்லவனாகவே இருப்பான். வில்லன் பிடிவாதமாக இறுதிவரை வில் லத்தனம் செய்வான். காதலர்களோ என்ன கஷ்டம் வந்தாலும் விடாப்பிடியாக ஒருவிதப் பிடிவாதத்துடன் காதலிப்பார்கள் எழுத்தில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் நா.பா. ஒரு பிடிவாதக்காரர். எழுத்துலகில் அடியெடுத்து வைத்த பிறகு மீண்டும் பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழ்ப் பண்டிதராகச் சேர்வதில்லை என்றும் எழுத்தாளராகவே கடைசிவரைவாழ்ந்து காட்டுவது என்றும் பிடிவாதமாக இருந்து வெற்றி பெற்றார். கல்கி ஆசிரியர் சதாசிவம் மதுரைக்கு ஒரு முறை சென்றிருந்த போது அவரைச் சந்தித்துப் பேசினார் நா.பா.கல்கியில் புதிய தலைமுறைக் (அந்நாளைய) கதாசிரியர்கள் எழுதுவதுதில்லை என்ற குறையை எடுத்துக் காட்டினார். நா.பா.வின் பேச்சு சதாசிவத்தைக் கவர்ந்தது. “நீங்களே அதற்கு ஏற்பாடுசெய்யுங் கள்; சென்னைக்கே வந்துவிடுங்கள் என்றார். கல்கியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் நா.பா. குறிஞ்சி மலர் அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தது என்றால் பொன் விலங்கும் பாண்டிமாதேவியும் அவற்றை மேலும் வளர்த்தன. х அவருடைய தொடர்கதைக்கு ஒவ்வோர் இதழிலும் ஆறு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆறு வரி அதிகமாக எழுதியிருப் பார். அதை அடித்துக் குறைத்துவிடுங்கள் என்றால், ஏன், இந்த ஆறு வரிகளை மட்டும் தனியே அச்சடித்துப் பக்கத்தின் விளிம்பில் ஒட்டி உள்ளடங்க மடித்து விட்டு விடலாமே." என்பார் தமது எழுத்தில் அவ்வளவு பற்றுதல், அதன் தரத்தில் அவ்வளவு நம்பிக்கை, அதனைச் சிதைக்க அனுமதிக்கக்கூடாது என்பதில் அத்தனை பிடிவாதம்! " - . - ஒரு சமயம் அவர் கதையின் இடையே இருந்த ஒரு வர்ணனையை நீக்கி விட்டேன். அப்போது அவர் ஊரில்