பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಡಾ—seg உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) இல்லை. அதனால் நானே பொறுப்பேற்றுச் செய்துவிட்டேன். அது ஆபாசவர்ணனையல்ல; ஆனால் அருவருப்பாக இருந்தது. கல்கியில் இடம் பெறக் கூடாத வர்ணனையாக எனக்குத் தோன்றியது. ஊரிலிருந்து திரும்பிய நா.பா.வுக்கு ஒர்ேகோபம். விஷயம், ஆசிரியர் சதாசிவத்தின் கவனத்துக்குப் போயிற்று. அவர் என் கருத்தை ஆமோதித்தார். ஆனால் நா.பா. இந்தத் தீர்ப்பை மனமொப்பி ஏற்றுக் கொள்ளவேயில்லை! அடுத்தாற்போல் அவருடைய சிறுகதை ஒன்று கல்கிக்கு ஏற்றதாக இல்லை என்பதாகக் கருதப்பட்ட போது அதனை வேறு ஒரு பத்திரிகையில் பிரசுரிக்க அனுப்பிவிட்டு, கல்கி காரியாலயத்திலிருந்துவிலகிக் கொண்டார். பத்திரிகைக்கென்று சில கொள்கைகள் இருக்கும். அதற்கு உட்பட்டுத்தான் அதில் பணியாற்றுவோர் நடந்து கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு, அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. 'தீபம்' என்ற பெயரில் சொந்தப் பத்திரிகையை ஆரம்பித்துவிட்டார் நா.பா. அதில் கல்கி நிறுவனத்தைச் சாடவும் செய்தார். ஆனால் சீக்கிரமே தாமும் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில், கல்கி பத்திரிகை ஆசிரியருக்கு இருந்த நிர்ப்பந்தங் களைப் புரிந்து கொள்வது நா.பா.வுக்குச் சாத்தியமாகியிருக்க வேண்டும். அதனால் மீண்டும் வெளியிலிருந்தபடியே கல் கிக்கு எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள், நாவல்கள் தவிர, தீரன் என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியலை அலசினார். சில காலம் அரசியல் வாதியாகவும் இருந்து பார்த்து ஏமாற்றமடைந்து திரும்பினார். இந்திய அரசியலில் தன்மானப் பிடிவாதங்களுக்கு இடமேது? சாகித்ய அகாதமி பரிசும், சாகித்ய அகாதமி உறுப்பினர் பதவியும், இலக்கியப் பத்திரிகை ஆசிரியரான தீபம் பார்த்தசாரதியை எளிதில் வந்தடைந்தன. அவருடைய ஆஜானுபாகுவான தோற்றம், நிமிர்ந்த பார்வை, கம்பீரநடை எல்லாமே அவருடைய தன்னம்பிக்கை யையும் அதனுடன் இணைந்திருந்த பிடிவாதத்தையும் உணர்த்தும். தமக்கு இதய நோய் வந்திருக்கிறது என்பதையே அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இல்லையென்றால் கருணாநிதி கூப்பிட்டார் என்பதற்காக மலேசியா தமிழ் மாநாட்டுக்குப் போயிருப்பாரா? திரும்பி வந்து நர்ஸிங்.