பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அரசன்
என்றதற்கு என் மகள் “இலக்கியவாணி
கவிதை படித்திருப்பாள் கவலை உனக்கே னென்றான்
அப்போது ஆங்கே அம்மங்கையும் வந்தாள்

அமராவதி
ஐம்பெருங் காப்பியம் என்றறைகின்றார்கள்
சிலம்பு மேகலை சிந்தாமணி மூன்றுண்டு
வளையும் குண்டலமும் ஏன் அழிந்தது
கற்றவரை அழையுங்கள் கேட்பேன் என்றாள்

சோழன்
நான் போர் நடத்தப்போகின்றேன் மகளே
கூத்தர் புகழேந்தி குணவீரர் இருக்கின்றார்
தமிழ் நடத்திக் கொண்டிருப்பதுன் பொறுப்பென்றான்
அம்மங்கை அவ்வையினும் பெரியவள் ஆயினாள்
தண்டியலங்காரன் தந்தையும் அம்பிகாபதி
வீரைக்கவிராயன் மந்தனும் அம்பிகாபதி
கம்பர் மகனும் ஒரு அம்பிகாபதி என்பார்
கோவையும் காரிகையையும் தந்தவன் எவனோ
அழுந்தூர் காளிக்கு பூசாரி நம் நாயகன்
ஒரு மாலைப் பொழுதில் அந்தி மயங்கும்போது
திருவிளக்கேற்றினான் திருவிளையாடல் என்னென்பேன்
எழுந்த ஒளிச்சுடர் எழுந்து ஓங்கிற்றோ
சிலையாக நின்றவள் செந்தமிழ்ப் பெண் ஆனாளோ

தேன்சிந்தும் முழுநிலவை முகமாய்க் கண்டான்