பக்கம்:ஐந்திணை வளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஐந்திணை வளம் பெறுகின்றோம். இந்த மனநிறைவினாலே நாம் ஐந்திணைச் செல்வத்தைப் பெற்றவர்களாகி, ஐந்திணைச் செல்வர்களாகி அகம் மலருகின்றோம். இங்ங்னம் அமைந்த இந்தத் தமிழ்ச் செல்வத்தினைத் தமிழறிஞர்கள் பொன்னேபோற் போற்றிப் பதினெண் கீழ்க் கணக்கு நூல் ‘ஐந்திணை எழுபது என்னும் அருந்தமிழ் நூலாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வழிவந்த நாம், அவர்களை வழியொற்றி அந்தச் செல்வத்தை நாமும் உடையவர்களாகி உவப்படைந்து உயர்தல் வேண்டும். 'ஐந்திணை எழுபது என்னும் பெயரோடு வழங்கும் இந்த அரியசெல்வத்தினை அமுதொத்த அழகுதமிழில் இன்புற யாத்து அருளிய சான்றோர் மூவாதியர் என்பவராவார். இவருடைய பெயரையன்றி, இவர்தம் வரலாற்றைப் பற்றிய செய்திகளுள் எதனையும் நம்மால் அறிய இயலவில்லை. - உலகம் உவக்க நூல் செய்த இந்த மூவாதியர் தம் புகழுருவோடு தமிழ் உள்ளவரையும் நிலைபெறுவர். இவர் பெயரைக்கொண்டு இவரைச் சமண சமயத்தவர் என்பாரும் சைவ சமயத்தவர் என்பாரும் இருசாரார் உள்ளனர். ஆனால் இவருடைய உள்ளத்தைக் கொண்டு பார்த்தால், இவரைச் செழுந்தமிழ்ச் சமயத்தினர் என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. - 'மு' என்பதும் 'ஆதி என்பதும் சைவ சமயத்துள் கொள்ளப்படுகின்ற பதி பசு பாசம்’ என்னும் முப்பொருள்களைக் குறிப்பனவாகலாம். முப்பொருளாகிய இந்த ஆதிப் பொருள்களை முற்றவும் உணர்ந்திருந்த மெய்ஞ்ஞானச் செல்வராகத் திகழ்ந்தமைப்பற்றி, இவருடைய பெயர்'மூவாதியர் என்று ஆகியிருத்தலும் கூடும். இவருடைய இந்த நூல், ஐந்திணைகட்கும் திணைக்குப் பதினான்கு வெண்பாக்களாக அமைந்து, எழுபது செய்யுட்களோடு திகழ்ந்தது. அவற்றுள் முல்லைக்கண்ணும் நெய்தற்கண்ணும் இரண்டிரண்டு செய்யுட்களைக் காலவெள்ளம் தின்று விட்டது. எஞ்சியிருப்பன அறுபத் தெட்டுச் செய்யுட்கள். அந்த அளவிலாவது நாம் பேறுபெற்றவர்கள் ஆகின்றோம். கால வெள்ளம் நான்கு செய்யுட்களோடு திருப்தியடைந்துவிட்டதல்லவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/10&oldid=761779" இலிருந்து மீள்விக்கப்பட்டது