பக்கம்:ஐந்திணை வளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ു கேசிகன் - 93 ஆழ்ந்து கிடக்கின்றான். தலைவியும் தன்னுடைய மகனின்பால் மனத்தைச் செலுத்தியவளாகப் பிரிவினாலே தான் கொண்ட பெரிதான வேதனையையும் உள்ளத்தே அடக்கிக் கொண்டு ஒழுகிவருகின்றாள். இந்தநிலையிலே,தலைவனின் மனம், மீளவும் தலைவியை நாடத் தொடங்குதலினாலே, அவன் தன்னுடைய வருகையை அறிவித்து வருமாறு கூறிப் பாணனைத் தலைவியால் ஏவுகின்றான். பாணன் வந்து, தலைவனின் கருத்தினைத் தெரிவித்து நிற்கத் தலைவி அதனாற் பொங்கிய தன் துயரத்தினை யெல்லாம் மறைத்தவளாக, விரக்தியுடன் தலைவனை ஏற்கமறுத்துக் கூறுகின்றாள். 'பாண் மகனே! நாடோறும் குற்றமற்ற பொன்வளை களையுடையதன் கைகளை வீசியும் விரித்தும் விளையாடுகின்ற என் புதல்வனாகிய சிறுவனை எனக்குத் துணையாக யான் கொண்டுள்ளேன். என்னளவில் இதுவேஎனக்குப்போதுமானது. இனித் தலைவன்பால் என் மனம் ஈடுபடுவது என்பதோ நிகழுமாறில்லை. ஆதலினாலே 'பொய்கைகளையுடைய ஊரனாகிய தலைவனின் திறன்களை எல்லாம் எடுத்துக் கூறிக்கொண்டு நீஇங்குநிற்றல் வேண்டாம்: தலைவன் என்னைப் பிரிய நேரிட்டது. என்னுடைய துயரமாகவே ஆகியிருந்தது என்றாலும், அதனை யான் ஏற்றிருப்பேன்; நீ எழுந்து செல்வாயாக’ என்று உரைத்தனள், பாணனும், அதன்மேல் எதுவும் சொல் நிற்றற்கு வாயெழாதவனாகத் தலைவியின் உள்ளத்தே நிரம்பி நிற்கும் தனிமைத்துயரினை உணர்ந்தவனாக, அவளுடைய பெண்மைச் செவ்வியைப் போற்றியவனாக, "புதல்வன் துணையுள்ளேன்’ என்ற உரிமைப்பேற்றை நினைந்து வியந்தவனாக, வெளியேறிச் செல்லுகின்றான். பொய்கைநல் ஊரன் திறங்கிளத்தல் என்னுடைய எவ்வம் எனினும் எழுந்தீக--வைகன் மறுவில் பொலந்தொடி வீசும் அலற்றுஞ் சிறுவன் உடையேன் துணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/101&oldid=761781" இலிருந்து மீள்விக்கப்பட்டது