பக்கம்:ஐந்திணை வளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஐந்திணை வளம் 5. நயம் திகழும் தலைவி அவ்வாறு தலைவன்பாற் கொண்ட காதலது மிகுதிப்பாட்டினை எடுத்துரைத்ததும்,அதனைக்கேட்டதோழி, அது முறைதானே என்று தெளிவு கொண்டவளாகி அமைந்துவிடவில்லை. இவ்வளவு காதலன்புடன் திகழும் இவளைப் பெறுப்பில்லாதுதுயரத்துக்கு ஆளாக்கிய தலைவன் மிகவும் கீழான புத்தியுடையவன்; அவன் சிறந்த பண்பினனே அல்லன்' என்றுதான் அவள் நினைக்கின்றாள். அவளுடைய இந்த நினைவின் வேகம், அடுத்து அவள் உரைக்கின்ற சொற்களிலே வெளிவருகின்றது. 'தோழி நீயோ இப்படியெல்லாம் நம்பிக்கை வைத்திருக்கின்றாய். அவன்பால் உள்ளத்தை இழந்துவிட்டநீ, பிறரை அளந்தறிகின்ற அறிவுத் திறனையும் இழந்து விட்டாய் போலும்! நின்னுடைய உறவினை, நின்னைப் போலவே அவனும் போற்ற வேண்டாமோ? அதுதானே காதலன்பின் நியதி. ஆனால், அவன்நின்னைத்தன்னுடைய இன்பவெறிக்குப் பயன்படுத்திக் கொள்பவனாக இருக்கின்றானே அல்லாமல், நினக்கு அருளுகின்ற பெருந்தகைமை உடையவனாக விளங்கவில்லையே! 'அவன் நினக்குத் தகுதியானவன் அல்லன். நின் பெருமைக்குப் பொருத்தமற்ற சிறுமதி கொண்டவன் அவன். நின்னுடைய அன்பினைப் பெறுவதற்கு அவன் கொஞ்சமும் அருகதையற்றவன். அதனால், அவனை மறந்துவிடு’ என்கின்றாள். தோழியின் சொற்களைக் கேட்டதும், தலைவன் மனத்திலே வேதனை படர்கின்றது. தன்னுடைய பிழையினை நினைக்கின்றான். தடுக்கமுடியாத சூழ்நிலையால்தான்வாராது போயினும், அதனால், எத்தகைய விபரீத விளைவுகட்குக்காரண மாக நேர்ந்ததென்பதை நினைத்து வேதனைப்படுகின்றான். தோழியின் பேச்சைக் கேட்டதும், தலைவியின் உள்ளத்திலே பெரிதும் வேதனை படரத் தொடங்குகின்றது. அவள் கற்புச்செல்வியாதலால்,தன்மனம்நிறைந்ததலைவனைத் தன் தோழியே பழித்துப் பேசுவதனைக் கேட்டதும் துடிதுடிக்கின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/26&oldid=761825" இலிருந்து மீள்விக்கப்பட்டது