பக்கம்:ஐந்திணை வளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 19 ஆனால், தோழியின் பழிப்புரை, தன்மேற் கொண்ட அன்பினால், தான் படுகின்ற பிரிவுத் துயரைக் காணச் சகியாமையினால் ஏற்பட்டது என்பதன்ையும் அவள் அறியாமல் இல்லை. அதனால், தன் தோழிக்கு மீண்டும் சமாதானம் கூறவே முற்படுகின்றாள். 'தோழி சான்றாண்மையாளரது நட்பு என்றும் சிதைவுறுவதில்லை. நிலைபெற்று வலிமை பெறுதலையே செய்யும். பின்னரும், அது நமக்குப் பேரின்பநலத்தையும் தருவதாயிருக்கும். இந்த உண்மையை நீ மறந்து விடாதே." 'நீர் நிலைகளால் வளத்துடன் காணப்படும் பூஞ்சோலைகளையுடைய மலைநாட்டைச் சேர்ந்தவன் நம் தலைவன். அவனும் சான்றாண்மை குன்றாதவன். அவன் நட்பானது குறைபடுதலின்றி இன்பம் மிகுந்ததாகவே விளங்கும். இப்படித்தான் என்நெஞ்சம் சொல்லுகின்றது. அதனால்,அவன் உறவை இகழ்ந்து உரையாதே. அதனை என்னாற் கேட்டுப் பொறுத்திருக்கமுடியவில்லை என்கின்றாள். * - தலைவியின் உள்ளத்தை வெளிப்படுத்தும் அந்தச் சொற்களைத் தலைவன் கேட்கின்றான். தான் அடைந்த காதலியின்பெண்மையைநினைந்துபெருமிதம்கொள்ளுகின்றான். தன்னைப் பழித்த தோழியை வெறுப்பதற்குப் பதிலாகத் தன் காதலியின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளச் செய்த பேருதவிக்காக, மனங்கலந்து போற்றுகின்றான். - இந்தக் காட்சியை நினைக்கின்ற மூவாதியர், தலைவியர்பால் எத்தகைய மனத்திண்மைநிலவவேண்டும் என்ற இல்லற நிலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டினைக் காண்கின்றார். அந்தத் தலைவியைப் போவவே ஒவ்வொரு இல்லத்தலைவியும் அமையவேண்டும் எனவும் விரும்புகின்றார். அவர் உள்ளம் பாடுகின்றது. தலைவியின் பேச்சு அந்தப்பாடற் பொருளாகி நம்மை இன்புறுத்துகின்றது. சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி வலியாகிப் பின்னும் பயக்கும்; மெலிவில் கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை நயந்திகழும் என்னும்என் நெஞ்சு. "மெலிவில் கயந்திகழ் சோலை மலைநாடன் அவன். ஆகவே, அவன் நம்மையும் மெலிவுறச் செய்தல் இலன். அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/27&oldid=761826" இலிருந்து மீள்விக்கப்பட்டது