பக்கம்:ஐந்திணை வளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஐந்திணை வளம் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றாயே? இது நினக்குப் பொருந்தாது என்று கூறுகின்றாள். அதனைக் கேட்டதும், தலைவியின் வேதனை குறைந்து விடவில்லை. குமுறல்தான் மிகுதியாகிச் சுடர் விட்டு ஒங்குகின்றது. - "தோழி ஏதோ என்மீதுள்ள அன்பின் காரணமாக, நான் வருந்துவதைத் தாளாமல், நீ ஏதேதோ இப்படியெல்லாம் பேசுகின்றாய். ஆனால், என்னுடைய நிலைமையினை நீ நினைத்தாயில்லை. "மேகங்கள் விரைந்து மழைத்துளிகளைச் சிந்துகின்றன. உள்ளிடத்தே இதழ்களையும், பூந்தாதுகளையும் உடைய மொட்டுக்கள் நிறைந்த கொன்றை மரங்கள் எரிவளர்த்தாற் போன்று மலர்ந்து காணப்படுகின்றன. பரந்து இடித்து உரைப்பதுபோல வானமும் முழங்குகின்றது. அதனை நோக்கி என் உயிரும் துடிப்பதுபோலப்படுகின்றதுயரத்தின் மிகுதியை எங்ங்னம் ஆற்றுவேன்?” இவ்வாறு, வானையும், மலர்ந்த கொன்றையையும் காட்டிப்புலம்புகின்றாள் தலைவி. கதழுறை வானஞ்சிதற இதழகத்துத் தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅய் இடிப்பது போலும் எழில்வானம் நோக்கித் துடிப்பது போலும் உயிர். ‘என் உயிர்துடிக்கின்றபோது,யான் எப்படிஅமைதியாக ஆற்றியிருக்க முடியும்?' என்று கேட்கின்றாள், தலைவி. அவளுக்கு எவர்தாம் ஆறுதல் உரைக்க முடியும்! 5. உருகுவது போலும் சட்டியிலே வெண்ணெயை இட்டு அடுப்பிலேற்றி நெருப்பினைமூட்டுகின்றோம். கட்டியாக இருந்தவெண்ணெய் உருகத் தொடங்குகின்றது. அதன் உறுதி தளர்ந்து உருகி, அது நீர்த்த நெய்யாக மாறுகின்றது. தலைவியின் உள்ளத்தே காமத்தீகொழுந்துவிட்டு எரியத் தொடங்குகின்றது. அந்த வெம்மையினால் அவளுடைய உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/48&oldid=761849" இலிருந்து மீள்விக்கப்பட்டது