பக்கம்:ஐந்திணை வளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 41 உருகுவதுபோலத் துடித்துத் தளர்கின்றது. தனக்கு ஆறுதல் கூறியிருக்கும் தன் தோழியிடத்திலே, அந்த நிலைமையைக் கூறுகின்றாள் அவள். - - தோழி: மயிலினங்கள் மழைத்துளிகளை விரும்பியவாய் அகவிக் கொண்டு, காடெங்கணும் தம்முடைய தோகையைப் பரப்பியவாய், ஆடத்தொடங்குகின்றன. “அவை அங்ங்னம் களித்து ஆடும்படியாகச் சூல்கொண்டு விரிகுவதுபோன்று கார்மேகங்கள்அதிருகின்றன. அந்த அதிரலைக் கேட்கக் கேட்க என் ஆவியும் உருகுவது போலத் துடிக்கின்றது! அங்ங்னமாக நான் எப்படியடி ஆற்றியிருப்பேன்’ இப்படித் தன்னுடைய வருத்தத்து மிகுதியினை உரைக்கின்றாள்.தலைவி. அவளுடைய இரங்கத்தக்கநிலைமையை நமக்குஓவியப்படுத்திக்காட்டுகின்றதுமூவாதியரின் செய்யுள். ஆலி விருப்புற்று அகவிப் புறவெல்லாம் பீலி பரப்பி மயிலாலச்--சூலி விரிகுவது போலுமிக் காரதிர ஆவி உருகுவது போலும் எனக்கு. 'ஆவிஉருகுவதுபோலும் எனக்கு என்ற சொற்களிலே, எவ்வளவோ துயரச்சுமையின் சாயல் வெளிப்படுகின்றது. இதனை நாமும் உணர்தல் வேண்டும். . 6. புயலும் வரும் 'இதோ பார்! நீ அவரை நினைந்து, அவர் வரவினை உட்கொண்டு இப்படித் துடிக்கின்றனை அவரும் நின்னைப் பிரிந்து இருப்பவர்தாமே? நின்னைப் போன்று நின் காதலரான அவரும் வருந்துவார் அல்லரோ? ஆகவே, வருத்தமுறும் அவர், காலத்தைத் தாழ்த்தவே மாட்டார்; விரைவிலேயே வந்து விடுவார்; அதுவரை ஆற்றியிரு’ என்று தோழிஉரைக்கின்றாள். தலைவியின் உள்ளம் தலைவனிடத்தே சென்று நிலைக்கின்றது. அவரும் தன்னைப் போலவே தனிமைக்கு ஆற்றாது வருந்துவரர் என்பதனை அவளும் உணர்கின்றாள். அதனால் அவர் விரைவிலே திரும்பிவிடுவார் என்று கொள்வதற்குப்பதிலாக, அவளுடைய உள்ளத்திலே வேறொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/49&oldid=761850" இலிருந்து மீள்விக்கப்பட்டது