பக்கம்:ஐந்திணை வளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஐந்திணை வளம் 'அவர் இன்று வருவாராயின் வளையும் கையிடத்தே நிற்பவாகும் என்றனள். இதனால், தலைவி தலைவன்பாற் கொண்டிருந்த பெருங்காதலும், அவனைப் பிரிந்ததனால் வருந்தியிருந்த வருத்தநிலையும் நன்றாகப் புலனாகும். தழங்குதல்-ஒலித்தல். - 10. வற்றுவிட்டன்று நீர்! வானத்தேகார்மேகங்கள் திரண்டெழுந்துள்ளன. அவை கடுமையாக இடித்து முழக்கத்தையும் எழுப்புகின்றன. அந்த முழக்கத்தோடு தொடர்ந்து மழைத்துளிகளையும் சொரிகின்றன இரவுமுழுவதும்இடைவிடாதுமழைபெய்துகொண்டிருக்கிறது. மேகங்கள் காற்றாலே அலைக்கழிக்கப்படுதலும் இல்லை. அதனால், அவை அலைதலற்றவையாயின. நிலையாக நின்று பெயலைச்சொரிந்து கொண்டும் இருந்தன. மழைபொழியப்பொழிய,மணவாளனைப் பிரிந்திருந்த தனிமைத்துயரம் தலைவியைநலிவிக்கின்றது. அவள் உள்ளமும் குமுறுகின்றது. அந்தக் குமுறலால் அவள் கண்கள் நீரைப் பொழிகின்றன. கண்கள் வடிக்கின்ற நீர் அப்படியே வடிந்து அவளுடைய முலைகளின்மேல் இடையறாது வழிந்து கொண்டிருக்கின்றது. அவளுடைய நெஞ்சத்தினதுகொதிப்பினை ஆற்றுவிக்கக் கண்கள் கருணைகொண்டனவோ? அல்லது, தாம் அவளுக்குக் காதலனைக்காட்டிய அந்த நிகழ்ச்சியை நினைந்து, அதுவே அவளுடைய துயரங்கட்கெல்லாம் அடிப்படை யாதலையும் உளங்கொண்டு, வருந்தி வருந்தித் தாமும் துயருற்றுக்கசிகின்றனவோ? - பொழுதும்விடிந்தது; தலைவியும் ஒருவாறு தன்னுடைய துயரத்தை மறந்திருக்க முயன்று கொண்டிருந்தாள். கதிரவன் மெல்ல வானத்தே எழுந்தவன், பகற்பொழுதினை முடித்துக் கொண்டு, மேற்குத் திசையிலே மறைவதற்குத் தொடங்கிக் கொண்டிருந்தான். வானம் சிவந்தது. மாலையின் வரவை அறிவிப்பனபோலக் காட்டிடத்தே வெண்முல்லைகளும் செம்முல்லைகளும் மலர்ந்தன. முல்லை மணம் காற்றோடு கலந்து வந்து தலைவியின்பால் மீண்டும் தனிமைத் துயரைப் பெருக்குகின்றது. அவள் வருகின்ற இரவினை எண்ணித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/54&oldid=761856" இலிருந்து மீள்விக்கப்பட்டது